சனம் ஷெட்டிக்கு ஒரு குழப்பம்.. நிறைய ஆபர் வருதாம்.. நீங்க ஆலோசனை சொல்லுங்களேன்!

Apr 22, 2025,06:41 PM IST

சென்னை: நடிகை சனம் ஷெட்டியைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. இப்போது அவருக்கு ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளதாம்.. உதவுங்கள் ரசிகர்களே என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.


பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் சனம் ஷெட்டி. தற்போது சென்னையில் வசிக்கிறார். தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்துள்ளார். 4வது சீசன் பிக் பாஸ் தமிழ் ஷோவில் கலந்து கொண்டு அதன் மூலம் மேலும் பிரபலமானவர். சாப்ட்வேர் என்ஜீனியராக இருந்து நடிகையாக மாறியவர் சனம் ஷெட்டி. 2016ம் ஆண்டு மிஸ் தென்னிந்தியா அழகிப் பட்டத்தையும் வென்றவர். தற்போது பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார் சனம் ஷெட்டி,. பிக் பாஸ் சமயத்தில் அது தொடர்பான கருத்துக்களை வைப்பார். மற்ற நேரங்களில் சமூகப் பிரச்சினைகள் குறித்தும் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்.


இந்த நிலையில் தற்போது திடீரென ஒரு டிவீட் போட்டுள்ளார் சனம் ஷெட்டி. இதற்கு ரசிகர்களிடையே கலவையான கருத்துக்கள் எழுந்துள்ளன. சனம் ஷெட்டி போட்டுள்ள டிவீட் இதுதான்: 




அரசியல் கட்சியில் சேர வருமாறு கூறி நிறைய அழைப்புகள் வருகின்றன.  நமக்கு செட் ஆகுமான்னு தெரியலையே.. மக்களே நான் சேரலாமா வேண்டாமா.. சொல்லுங்களேன்.. அப்படி சேர்ந்தால், எந்தக் கட்சி எனக்கு செட் ஆகும்னும் சொல்லுங்க என்று கேட்டுள்ளார் சனம் ஷெட்டி. இதையடுத்து கருத்துக்களும், யோசனைகளும் பதில்களும் குவிய ஆரம்பித்து விட்டன. 


ஆபர் தருவது எந்தக் கட்சி என்று ஒரு ரசிகர் கேட்டுள்ளார். அதற்குப் பெயரைச் சொல்ல முடியாது என்று பதிலளித்துள்ளார் சனம் ஷெட்டி. நீங்க சேரப் போகும் கட்சிக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று ஒருவர் கலாய்த்துள்ளார்.. அதற்கு சனம் ஷெட்டி, என்னப்பா இப்படிச் சொல்றீங்க என்று நொந்து போய் பதில் போட்டுள்ளார்.


உங்களுக்கு செட் ஆகுமான்னு உங்களுக்கே தெரியாதபோது எங்களுக்கு எப்படித் தெரியும். இந்த அடிப்படை யோசனையே இல்லாததுனால செட் ஆகாது என்று ஒருவர் பிராக்டிகலாக தெரிவித்துள்ளார்.  உங்களுக்கு தவெகதான் செட் ஆகும் என்று ஒரு விஜய் ரசிகர் வந்து கருத்து தெரிவித்துள்ளார்.


இன்னொருவரோ பிக் பாஸ் அய்யா கட்சி என்று கமல் ஹாசன் கட்சியில் சேர ஐடியா கொடுத்துள்ளார். இப்படி ஆளாளுக்கு ஒரு ஐடியாவைக் கொடுத்துக் கொண்டுள்ளனர். சரி, சனம் ஷெட்டியை இப்படி வேண்டி விரும்பி வாங்கம்மா வாங்க என்று அழைப்பது எந்தக் கட்சின்னு தெரியலையே!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

கேரளாவில் இனி யாரும் மிக ஏழைகள் அல்ல.. நவம்பர் 1ல் பிரகடனம் செய்கிறார் முதல்வர் பினராயி விஜயன்

news

தங்கம் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா? இதோ இன்றைய முழு விபரம்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 24, 2025... இன்று நன்மை தேடி வரும் ராசிகள்

news

தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு : தமிழ்நாடு அரசு

news

Tamil Nadu heavy Rain alert: 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!

news

எங்கெங்கும் ஜில் ஜில் மழை.. பிரச்சினைகளும் கூடவே களை கட்டுது.. எப்படி சமாளிக்கலாம்??

news

திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் ரோட்டில் இருந்தவன் நான்: நடிகர் சூரியின் நச் பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்