விநாயகனே வெவ்வினையைவேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து.
மார்ச் மாதம் 17ஆம் தேதி திங்கட்கிழமை பங்குனி மூன்றாம் நாள் வரும் தேய்பிறை சதுர்த்தி திதி சங்கடஹர சதுர்த்தி ஆகும். ஒவ்வொரு மாதம் பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காவது நாள் சதுர்த்தி திதி. இன்று வரும் சதுர்த்தி திதியில் நம் சங்கடங்களை தீர்க்கும் முழுமுதற் கடவுள் ஆன விநாயகரை வழிபாடு செய்து வந்தால் நம் கஷ்டங்கள் நீங்கி, குடும்பத்தில் சுபிட்சம் பெருகும் .சந்திர தோஷம் ஏற்படாது என்பது நம்பிக்கை.
விநாயகர் பெருமானே இன்று மாலை அருகில் உள்ள கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வழிபட, வாழ்வில் உயர்வை தந்தருள்வார். அனைத்து தடைகளும் நீங்கி வெற்றிகள் கிடைக்கும். அருகிலுள்ள சிவாலயங்கள் ,அம்மன் ஆலயங்களில் உள்ள விநாயகர் சன்னதிகளுக்கு சென்று வழிபட நினைத்தது நிறைவேற்றி தருவார் விநாயகர் பெருமான். கோவிலுக்கு செல்பவர்கள் அபிஷேகப் பொருட்கள் வாங்கிச் செல்லலாம் .பால் ,நெய், மலர்கள் ,அருகம்புல் மாலை சார்த்துவதும், வெள்ளெருக்கு மாலை சார்த்துவது விசேஷம்.
வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி விநாயகருக்கு மலர்களால் அலங்கரித்து சர்க்கரை பொங்கல் ,பால் பாயாசம், கேசரி ,கொழுக்கட்டை, சுண்டல் இவற்றில் ஏதேனும் அவரவர்க்கு உகந்தவாறு நெய்வேத்தியமாக வைத்து வழிபடுவது மகத்துவம். அருகம்புல் மாலை சாற்றி விநாயகனே வழிப்பட பிறவிப் பிணி நீங்கி இன்பம் பெருகும். அவ்வையார் அருளிய விநாயகர் அகவல் படிக்கலாம். கணேச காயத்ரி படிக்கலாம். இவை மனதையும் ,புத்தியையும் தெளிவாக வைக்கும். படிக்கும் குழந்தைகள், பொது தேர்வு எழுதும் குழந்தைகளுக்கு விநாயகர் அருள் கிட்டும். அந்த குழந்தைகளின் வீட்டில் உள்ள பெரியவர்கள் விரதமிருந்து வழிபட அவர்களுக்கு வெற்றி நிச்சயம்.
'சங்கட 'என்பது துன்பம், 'ஹர 'என்பது நீங்குதல், சங்கடஹர என்பது சங்கடங்களில் அதாவது துன்பங்களில் இருந்து விடுபடுதல் என்று பொருள். இவ்வாறு சங்கடஹர சதுர்த்தி அன்று வழிபாடு செய்தால் சகல சங்கடங்களையும் தீர்த்து வைப்பார் விநாயகர் பெருமான்.
மேலும் ஆன்மீக தகவலுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன். உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}