சங்கடஹர சதுர்த்தி 2026 இன்று.. இந்த ஆண்டின் முதல் சதுர்த்தி விரதம்!

Jan 06, 2026,10:44 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


விசுவாவசு வருடம் 2026 ஜனவரி மாதம் 6 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மார்கழி மாதம் 22ஆம் நாள் இந்த வருடத்தின் முதல் சங்கடஹர சதுர்த்தி அமைந்துள்ளது. இது தேய்பிறை சதுர்த்தி தினமாகும். இந்த நாளில்  சிறப்பு யாதெனில் செவ்வாய்க்கிழமை அமைந்துள்ள சங்கடஹர சதுர்த்தி "அங்காரக சதுர்த்தி "என்று அழைக்கப்படுகிறது.


இந்த தேய்பிறை சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொள்வதன் நோக்கம் யாதெனில் துன்பங்கள், தடைகள், கடன் தொல்லைகள், பலவித பணப் பிரச்சினைகள் நீங்க முழு முதல் கடவுளான விநாயகர் பெருமானை வழிபடுவதே ஆகும்.

 வளர்பிறையில் வரும் சதுர்த்தியை விட தேய்பிறையில் வரும் சங்கடஹர சதுர்த்தி விரதம் அதிகமானோர் கடைப்பிடிக்கின்றனர்.


" சங்கடஹர "என்பதற்கு சங்கடம் அதாவது துன்பங்கள், "ஹர"- அறுப்பது, எல்லா துன்பத்தையும் அளிக்கக்கூடிய சக்தி வாய்ந்த சதுர்த்தி விரதம் என்பதாலேயே சங்கடஹர சதுர்த்தி அன்று இவ்விரதம் கடைபிடிக்கப்படுகிறது.


சங்கடஹர சதுர்த்தி அன்று அருகம்புல் மாலை சாற்றி விநாயகரை வழிபட பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெறுவோம் என்பது ஐதீகம். சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து மாலையில் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் அபிஷேக ஆராதனைகளில் பங்கேற்று விரதம் முடித்துக் கொள்வது சிறப்பு. வீடுகளில் விநாயகருக்கு அருகம்புல் மற்றும் மலர்கள் சாற்றி கொழுக்கட்டை நைவேத்தியம் வைத்து தீப தூப ஆராதனைகள் செய்து வழிபடுவது கூடுதல் பலன் கிடைக்கும். சங்கடஹர சதுர்த்தி அன்று படிக்க வேண்டிய மந்திரங்கள்:


பல வினை போக்கும் சக்தி மிகுந்த மகா கணபதி மந்திரம்:




ஓம் ஸ்ரீம் கணா தி பதயே 

ஏகத்தந்தாய லம்போதராய 

ஹேரம் பாய  நாலி கேர பிரியாய 

மோதபக்ஷணா ய //

மமா பீஷ்ட பலம்  தேஹி 

பிரதி கூலம் மே நஸ் யது /

அனுகூலம் மே வசமானய ஸ்வா ஹா //


நினைத்த காரியம் நிறைவேற விநாயகர் 108 போற்றி :


1. ஓம் விநாயகனே போற்றி.

2. ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி.

3. ஓம் அரச மரத்தடி அமர்ந்தவனே போற்றி.

4. ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி.

5. ஓம் அமிர்த கணேசா போற்றி.

6. ஓம்  அறு கினில்

 மகிழ் பவனே போற்றி.

7. ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி.

8. ஓம் ஆனை முகத்தோனே போற்றி.

9. ஓம் ஆறுமுக சோதரனே போற்றி.

10. ஓம் ஆதி மூலமே போற்றி ஓம் ஆனந்த உருவே போற்றி.

11. ஓம் ஆபத் சகாயா போற்றி.

12. ஓம் இமவான்  சந்ததியே போற்றி.

13. ஓம் இடரை 

 களை வோனே போற்றி.

14. ஓம் ஈசன் மகனே போற்றி.

15. உன் ஈகை உருவே போற்றி.

16. ஓம் உண்மை  வடிவே போற்றி .

17. உன் உலக நாயகனே போற்றி 18.  ஓம்  ஊறும் களிப்பே போற்றி.

 19.ஓம் ஊழ்வினை அறுப்பவனே போற்றி.

20. ஓம் எளியவனே போற்றி.

21. ஓம் எந்தையே போற்றி 

22. ஓம் எங்கும் இருப்பவனே போற்றி

23. ஓம் எருக்கு அணிந்தவனே போற்றி 

24. ஓம் ஏழை பங்காளனே போற்றி 

25. ஓம் ஏற்றம் அளிப்பவனே போற்றி 

26. ஓம் ஐயனே போற்றி ஓம் ஐங்கரனே போற்றி 

27. ஓம் ஒப்பில்லாதவனே போற்றி 

28. உன் ஒதுக்க முடியாதவனே போற்றி 

29. ஓம் ஒளிமய உருவே போற்றி 

30. ஓம் ஔவைக்கருளியவனே போற்றி 

31. ஓம் கருணாகரனே போற்றி

32. ஓம் கரணத்தில் மகிழ்பவனே போற்றி 

33. ஓம் கணேசனே போற்றி

34. ஓம் கண நாயகனே போற்றி 

35. ஓம்   கண்ணிற்  படுபவனே போற்றி.

36. ஓம் கலியுக நாதனே போற்றி 

37. ஓம் கற்பகத் தருவே போற்றி 

38. ஓம் கந்தனுக்கு தவியவனே போற்றி 

39. ஓம் கிருபா நிதியே போற்றி

40. ஓம் கீர்த்தி அளிப்பவனே போற்றி

41. ஓம் குட்டில் மகிழ் பவனே போற்றி 

42. ஓம் குறைகள் தீர்ப்பவனே போற்றி

43. ஓம் குண நிதியே போற்றி.

44. ஓம் குற்றம் பொறுப்போனே போற்றி 

 45.ஓம் கூ விட வருவோய் போற்றி.

46. ஓம் கூத்தன் மகனே போற்றி 

47. ஓம் கொள்ளை கொள்வோனே போற்றி 

48. ஓம் கொழுக்கட்டை பிரியனே போற்றி 

49. ஓம் கோனே போற்றி.

50. ஓம் கோவிந்தன் மருமகனே போற்றி.

51. ஓம் சடுதியில் வருபவனே போற்றி.

52. ஓம் சங்கரன் புதல்வனே போற்றி.

53. ஓம் சங்கடஹரனே போற்றி.

54. ஓம் சதுர்த்தி நாயகனே போற்றி

55. ஓம் சிறிய கண்ணோனே போற்றி 

56. ஓம் சித்தம் கவர்ந்தவனே போற்றி 

57. ஓம் சுருதி பொருளே போற்றி 

58. ஓம் சுந்தரவடிவே போற்றி 

59. ஓம் ஞாலம் காப்பவனே போற்றி 

60. ஓம் ஞான முதல்வனே போற்றி 

61. ஓம் தந்தம் உடைந்தவனே போற்றி 

62. ஓம் தந்தத் தா ற் எழுதியவனே போற்றி.

63. ஓம் தும்பிக்கை உடையாய் போற்றி 

64. ஓம் துயர் துடைப்பவனே போற்றி 

65. ஓம் தெருவெலாம் காப்பவனே போற்றி.

 66.ஓம் தேவாதி தேவனே போற்றி.

67. ஓம் தொந்தி விநாயகனே போற்றி 

68. ஓம் தொழுவோ நாயகனே போற்றி 

69. ஓம் தோணியே போற்றி.

70. ஓம் தோன்றலே போற்றி

71. ஓம் நம்பியே போற்றி

72. ஓம் நாதனே போற்றி

73. ஓம் நீற ணிந்தவனே போற்றி.


74. ஓம் நீர் கரை அமர்ந்தவனே போற்றி

75. ஓம் பழத்தை வென்றவனே போற்றி

76. ஓம் பாரதம் எழுதியவனே போற்றி 

77. ஓம் பரம்பொருளே போற்றி 

78. ஓம் பரிபூரணனே போற்றி

79. ஓம் பிரணவமே போற்றி

80. ஓம் பிரம்மச்சாரியே போற்றி 

81. ஓம் பிள்ளையாரே போற்றி 

82. ஓம் பிள்ளையார்பட்டி யானே போற்றி

83. ஓம் பிறவிப் பிணி தீர்ப்பவனே போற்றி 

84. ஓம் பிள்ளைகளை ஈர்ப்பவனே போற்றி 

85. ஓம் புது மை வடிவே போற்றி .

86. ஓம் புண்ணியனே போற்றி

87. ஓம் பெரியவனே போற்றி 

88. ஓம் பெரிய உடலோனே போற்றி 

89. ஓம் பேரருளாளனே போற்றி 

90. ஓம் பேதம் அறுப்போனே போற்றி

91. ஓம் மஞ்சளில் இருப்பவனே போற்றி 

92. ஓம் மகிமை அளிப்பவனே போற்றி

93. ஓம் மகா கணபதியே போற்றி

94. ஓம் மகேசுவரனே போற்றி 

95. ஓம் முக்குறு ணி  விநாயகனே போற்றி  

96. ஓம் முதலில் வணங்கப்படுவோனே போற்றி 

97. ஓம் முறக்காதோனே போற்றி.

98. ஓம் முழுமுதற் கடவுளே போற்றி 

99. ஓம் முக்கணன் மகனே போற்றி.

100. ஓம் முக்காலம் அறிந் தானேபோற்றி.

101. ஓம் மூத்தோனே போற்றி.

 102. ஓம் மூஞ் சுறு வாகனனே போற்றி.

103. ஓம் வல்லப கணபதியே போற்றி.

104. ஓம் வரம் தரும் நாயகனே போற்றி 

 105.ஓம் விக்னேஸ்வரனே போற்றி.

106. ஓம் வியாசன் சேவகனே போற்றி.

107. ஓம் விடலை க்காய்  ஏற்பவனே போற்றி.

108. ஓம் வெற்றி அளிப்பவனே போற்றி.


மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென்தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அமித்ஷாவா அவதூறு ஷாவா?...கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்

news

ஜனநாயகன் பட வழக்கு...படம் ரிலீசாகும் ஜனவரி 09ம் தேதி காலை தீர்ப்பு

news

ஆட்டத்தை துவங்கிய அதிமுக...பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்கிறார் சி.வி.சண்முகம்

news

ஜல்லிக்கட்டு ஒன்றும் ஐபிஎல் போட்டி அல்ல: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

news

அதிமுக கூட்டணியில் இணைந்தது அன்புமணி தரப்பு பாமக

news

விஜய்யின் கடைசிப்படம் ஜனநாயகன் என்பதை நான் நம்பவில்லை: தமிழிசை செளந்தரராஜன்

news

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தக வெளியீட்டிற்குத் தடை

news

மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் திமுக: அண்ணாமலை காட்டம்

news

தமிழகத்தில் ஆவில் பால் பச்சை பாக்கெட் விலை உயர்வா? ஆவின் நிர்வாகம் விளக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்