அகர்தலா: திரிபுராவில் உள்ள ஒரு கல்லூரியில் சரஸ்வதி சிலையை ஆபாசமான கோலத்தில் வைத்திருந்ததாக கூறி, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
திரிபுரா தலைநகர் அகர்தலாவில், அரசு கலை மற்றும் கைவினை கல்லூரி உள்ளது. இங்குள்ள வளாகத்தில் சரஸ்வதி சிலை ஒன்று அமைந்துள்ளது. கடந்த புதன்கிழமை வசந்த பஞ்சமி அன்று சரஸ்வதி சிலைக்கு பூஜைகள் நடைபெற்றன.அப்போது பாரம்பரிய சேலை இல்லாமல் சரஸ்வதி சிலை ஆபாசமான கோலத்தில் இருப்பதாக கூறி சிலர் வீடியோவை வைரலாக்கினர்.
இதை இப்போது பாஜகவின் மாணவர் அணியான ஏபிவிபி பிரச்சினையாக்கியுள்ளது. சரஸ்வதி சிலை ஆபாசமாக இருப்பதாக கூறி அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஏபிவிபி அமைப்பின் இணைச் செயலாளர் திபாகர் ஆச்சார்ஜி கூறுகையில், சரஸ்வதி தேவியின் சிலையில் உள்ள சேலை அகற்றப்பட்டு சித்தரித்தது மிகவும் கொடூரமானது. இது மத உணர்வை புண்படுத்துவது என்றார்.
இந்த விவகாரம் குறித்து திரிபுரா கலை மற்றும் கைவினைப் கல்லூரி முதல்வர் அபிஷித் பட்டாச்சாரி கூறுகையில், இந்த சிலை வட மற்றும் தென்னிந்திய கோயில்களில் காணப்படும் சிலை அமைப்பை பின்பற்றியது. இதனால் நாங்கள் யாருடைய மனதையும் புண்படுத்தவில்லை. அவர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் சிலையை மாற்றி உள்ளோம் என கூறினார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}