அலைபேசி பேச்சு

Jun 23, 2026,03:55 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


அலைபேசியில் பேசும் வாய்...

அவன் கண்களும் கருத்தும், 

என்றும்

கணினியிலும்,

இன்னொரு அலைபேசியிலும்,

துணி துவைக்கும் எந்திரத்திலும், 

அடுப்பில் ஏற்றிய வாணலியில்

கொதிக்கும் குழம்பிலும்;


நானே பேசிக் கொண்டிருக்க;

ஒற்றை வார்த்தையில்

பதில்கள் உதிர

என் உதிரம் கொதிக்க;

கண்ணோடு கண் நோக்கி பேசாத

மகனிடம்,நான் துரிதமாக

கையசைத்து விடை பெறும் நேரத்தில்;



என்னைவிட துரிதமாக அவன் 

அலைபேசியைத் துண்டிக்கும் 

தருணத்தில்;அவன் சொன்னது

“அம்மா! அடுத்த வாரம் மீண்டும் பேசலாம்“

கசிந்த கண்கள் இப்போதெல்லாம் 

கசியாமல் இருக்கப் பழகிக் கொண்டன.


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை;  கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

உலகத்தில் சிறந்த பூ எது?

news

பாலமுரளி கிருஷ்ணா.. ஒரு நாள் போதுமா?

news

பிரபல நடிகர் நானா படேகர் மறைவு: பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த், குஷ்பு இரங்கல்

news

அதீத அன்பு.. ஒரு நிமிடக் கதை (30)

news

தென்தமிழ் தலையங்கம்: வற்றிப்போகும் பிரான்சும் வறண்டுவரும் பூமியும்!

news

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: தென் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

news

மாத்திரை கவரில் இந்தி அச்சிடப்பட்ட விவகாரம்: அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

news

25 ஆண்டுகால அரசியல் பயணம் மக்கள் கொடுத்தது...பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி பேச்சு

news

மக்களுக்கு நல்லது செய்யணும் - நிர்வாகிகளுக்கு அட்வைஸ்: அரசியலுக்கு வர போகிறாரா சிவகார்த்திகேயன்?

அதிகம் பார்க்கும் செய்திகள்