மின்சாரத் துறை வெள்ளை அறிக்கை ஜூன் 25-ல் வெளியீடு: அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு

Jun 23, 2026,05:17 PM IST

சென்னை: தமிழக மின்சாரத் துறையின் தற்போதைய நிலை, நிதிச் சுமை மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த மிக முக்கியமான "வெள்ளை அறிக்கை" வரும் ஜூன் 25-ஆம் தேதி வியாழக்கிழமை வெளியிடப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


தமிழக மின்சார வாரியம் (TANGEDCO) கடந்த சில ஆண்டுகளாகவே பெரும் நிதி நெருக்கடியிலும், கடன் சுமையிலும் தவித்து வருகிறது. மின்சாரத் துறையின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வர வேண்டும் என்றும், துறையின் உண்மையான நிலையை பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்து வந்தன. 


இந்த நிலையில், மின்சாரத் துறையின் தற்போதைய ஒட்டுமொத்த நிதி நிலைமை, மின் உற்பத்தி விவரங்கள், தனியாரிடமிருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவு, அதற்கான செலவினங்கள் மற்றும் மின் வாரியத்தின் கடன் சுமை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய விரிவான வெள்ளை அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இதனை வரும் வியாழக்கிழமை (ஜூன் 25) வெளியிட உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.


வெள்ளை அறிக்கையில் என்ன எதிர்பார்க்கலாம்?




பொது மக்களாலும், அரசியல் வட்டாரங்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த வெள்ளை அறிக்கையில் பின்வரும் முக்கிய அம்சங்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது:


மின் வாரியத்தின் கடன் சுமை: கடந்த ஆட்சி காலங்களில் மின் வாரியத்திற்கு ஏற்பட்ட நஷ்டங்கள் மற்றும் தற்போதைய ஒட்டுமொத்த கடன் தொகை எவ்வளவு என்பது பற்றிய துல்லியமான புள்ளிவிவரங்கள்.


மின் உற்பத்தி மற்றும் கொள்முதல் செலவு: மாநில அரசின் சொந்த மின் உற்பத்தி நிலையங்களின் திறன் மற்றும் தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதன் பின்னணி.


சீர்திருத்த நடவடிக்கைகள்: மின் விநியோகத்தில் ஏற்படும் இழப்புகளைக் குறைப்பது மற்றும் மின் வாரியத்தை மீட்டெடுப்பதற்கான எதிர்காலச் சீர்திருத்தங்கள்.


2வது வெள்ளை அறிக்கை : 


சமீபத்தில் தமிழகத்தில் நிதி நிலை குறித்து நிதித்துறை அமைச்சர் மரியா வில்சன் வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். இது விளம்பரத்திற்காக வெளியிடப்பட்ட வெற்று அறிக்கை; யாரை காப்பாற்றுவதற்காக இந்த வெள்ளை அறிக்கை என திமுக.,வை சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்து இருந்தார். 


வெள்ளை அறிக்கையை சட்டசபையில் தான் வெளியிட வேண்டும். சட்டசபைக்கு வெளியே வெளியிடுவது மரபுல்ல என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறி இருந்தார். இந்நிலையில் தற்போது மின்சார துறைக்கான வெள்ளை அறிக்கையும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மாணவர் போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை: வெடித்தது எதிர்ப்பு... வாபஸ் பெற்றது தமிழக அரசு!

news

வேறென்ன வேண்டும் எனக்கு.. அழகிய சிங்கரின் என்பா!

news

சிந்தனைச் சிதறல்..பணம்.. உழைப்பின் மதிப்பை உணர்த்தி தானும் உயரும் உயர் சாதனம்!

news

சித்தனாய்ப் புத்தனாய் இருந்த என்னை!

news

"பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய்வண்ணத்தானும்".. திருநாவுக்கரசர் வரலாறு

news

கவன ஈர்ப்பு தீர்மானம் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

news

Travel story: பனம் குருத்தில் செய்த ஊறுகாய்.. இன்னும் மறக்காத நாக்கு.. என்னா டேஸ்ட்டுப்பா!

news

அனைத்து எம்எல்ஏ.,வுக்கும் கார், மதுரையில் புற்றுநோய் மருத்துவமனை…முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்

news

"காங்கிரஸ், பாஜக.,வுக்கு இருப்பது ஒரே ஜீன் தான்" நீட் விவகாரத்தில் சி.வி.சண்முகம் காட்டமான விமர்சனம்

அதிகம் பார்க்கும் செய்திகள்