நிலத்தடி நீரை உயர்த்துவோம்.. அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ வழி செய்வோம்!

Mar 22, 2026,02:28 PM IST
- டி. ஜெனிட்டா ரீனா

மார்ச் 22 .. இன்று உலக தண்ணீர் தினம் 

"நீரின்றி அமையாது உலகு ' வான்சிறப்பு 2 ஆம் அதிகாரத்தில் வள்ளுவர் நீரின் முக்கியத்துவத்தை  உணர்த்தியிருக்கிறார்.

இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு உயிருக்கும் நீர் மிகவும் இன்றியமையாதது. நீர் இல்லை என்றால் அனைத்து உயிர்களின் வாழ்க்கையும் பாதிக்கப்படும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நீரை நாம் வீணாக்காமல் சேமித்து வைக்க வேண்டும்.

வானில் இருந்து பொழியும் மழையானது மண்ணில் மழைத்துளிகளாக விழுகிறது. அந்த மழை நீரானது ஆறு, ஏரி, குளம், கடல் கிணறு, ஓடை என பல நீர் நிலைகளில் சேமிக்கப்படுகிறது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நீரை நாம் வீணாக்காமல்  சேமிக்க வேண்டும். வீடுகளில் இருந்து வெளியேறும் நீரை வீட்டு தோட்டத்திற்கு பாய்ச்சலாம். மழை அதிகமாக பொழியும்போது வீட்டில் நீர்த்தேக்க தொட்டி அமைத்து மழைநீர் சேகரிப்பு தொட்டி மூலம் நிலத்தடி நீரை சேமிக்கலாம்.



மழை நீரை மீண்டும் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு நாம் நீர் தொட்டிகளில் சேமித்து வைத்தும் பயன்படுத்தலாம். விழும் மழை நீரை நாம் மண்ணிற்குள் போர்வெல் போட்டிருந்தால் அதில்  விட்டு நாம் சேமித்து வைக்கலாம். வானில் இருந்து கிடைக்கும் அரிய பொக்கிஷத்தை நாம் பேணி பாதுகாக்க வேண்டும். நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். விவசாயத்திற்கும் மற்ற அனைத்து தொழில்களுக்கும் மிகவும் முக்கியமான பயன்படும் நீரை நாம் தேவை இன்றி வீணாக்கக் கூடாது.

நீரின் சுழற்சி வானில் இருந்து பொழியும் மழையானது ஆறு,குளம், ஏரிகளில் கடலில் விழுகிறது. கடலில் கலக்கும் பெருவாரியான நீரை நாம் பாதுகாப்பான முறையில் சேமித்து வைத்து நம் தேவைகளுக்கு பயன்படுத்தலாம். நீர்நிலைகள் உள்ள இடங்களை வீட்டு மனைகள் ஆக்குவதன் மூலமும் நாம் நிறைய இழப்புகளை சந்திக்கிறோம். இயற்கையை பேணிப் பாதுகாக்க வேண்டும்.



நீர் சுழற்சியானது ஆறு ஏரி குளம் கடல்களில் உள்ள நீரானது வெப்பம் அடைந்து ஆவியாகி மேலே செல்கிறது. மேலே சென்றவுடன் வானத்தில் கருமேகக் கூட்டங்கள் உருவாகிறது. அந்த மேகக் கூட்டங்களின் மீது குளிர்ந்த காற்று பட்டவுடன் அது மீண்டும் மழையாக பொழிகிறது. இதுவே நீரின் சுழற்சி.

விவசாயத்திற்கு பயன்படும் நீரின் அளவானது கோடைகாலத்தில் மிகக் குறைவாக பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்தலாம். நீர் அதிகமாக தேவைப்படும் பயிர்களை பயிரிடுவதை தவிர்த்து நீர் குறைவாக தேவைப்படும் பயிர்களை கோடைகாலத்தில் பயிரிடலாம். நீர் மேலாண்மையை கடைப்பிடிக்கலாம். நீரை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தலாம். 

உலகில் உள்ள அனைவருக்கும் நீரின் தேவையானது அதிகமாக உள்ளது. ஆனால் உலக பரப்புகளில் நீரின் அளவு மிகவும் குறைவாக உள்ளது. ஆகவே நீரை பாதுகாக்காமல் விட்டால் நீருக்காக மீண்டும் ஒரு போர் கூட உலகத்தில் நிகழக் கூடும். ஆகவே வற்றும் வளங்களாகிய நீரை நாம் வீணாக்காமல் அதை சேமித்து வைத்து நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்கு உரிய முயற்சிகளை எடுக்க வேண்டும். அதற்கு நம்முடைய அறிவியல் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்த வேண்டும். இதுவே வளமான வாழ்விற்கு அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ உதவும்.

மழை நீரை சேமிப்போம்: நாட்டு வளம் காப்போம்!!!நிலத்தடி நீரை உயர்த்துவோம்!!!அனைத்து உயிர்களும்  நலமுடன் வாழ வழி செய்வோம்.!!!

(டி. ஜெனிட்டா ரீனா, ஆசிரியர், வயலாநல்லூர், பூந்தமல்லி, திருவள்ளூர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தண்ணீரை சேகரித்து.. அடுத்த தலைமுறைக்கு சேமித்துத் தர வேண்டும்.. மாணவர்களுக்கு அறிவுரை

news

நிலத்தடி நீரை உயர்த்துவோம்.. அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ வழி செய்வோம்!

news

சாதாரண வேலையில், அசாதாரண சேவை.. மர மனிதன் யோகநாதன்!

news

நீரின்றி உயிரில்லை.. நீரை சேமிக்கப் பழகுவோம்.. World Water Day

news

கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு: சாமானிய மக்களைக் காக்க இந்தியாவின் அதிரடி நடவடிக்கை

news

புதுச்சேரி சட்டசபைத் தேர்தல்.. 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக!

news

சென்னையில் ஒரு தொகுதி வேண்டும்...திமுக-விற்கு சிபிஎம் நிபந்தனை?

news

டில்லி வந்தது இதுக்கு தான்... ஒரே போடாக போட்ட டிடிவி தினகரன்

news

பியூஷ் கோயல் வருகைக்குப் பின் தொகுதிப் பங்கீடு முடிவாகும் - நயினார் நாகேந்திரன் தகவல்

அதிகம் பார்க்கும் செய்திகள்