சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எளிய அறிவியல் சோதனைகள் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எளிய அறிவியல் சோதனைகள் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயற்பியல் மாற்றமும்,வேதியியல் மாற்றமும் எவ்வாறு நிகழ்கிறது? என்பதனை மாணவர்கள் நேரடியாக கற்று தெரிந்து கொண்டனர்.

பயிற்சியாளர்கள் தனசேகர், ஜோதி மீனாள் மற்றும் அரங்குலவன் ஆகியோர் அறிவியல் உபகரணங்களை கொண்டு அறிவியல் சார்ந்த விளக்கங்களை நேரடி சோதனைகள் மூலம் செய்து காண்பித்து விளக்கினார்கள். எலக்ட்ரான்,புரோட்டான்,வெப்ப கொள்வினை, வெப்ப உமிழ்வினை,அனுவின் தன்மை,விசையும் ,இயக்கமும், இயற்பியல்,வேதியியல் மாற்றங்கள் உள்ளிட்ட அறிவியல் பயன்பாடு தொடர்பான செயல்முறைகள் போன்றவற்றை செய்து காண்பித்து தெளிவாக விளக்கம் அளித்தனர்.

மாணவர்கள் பலர் கேள்விகள் கேட்டு, அதற்குரிய பதில்களைப் பெற்றனர். இந்த நிகழ்ச்சியை ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார். அ.மு.மு. அறக்கட்டளையினர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
SIR வேண்டாம் என்று திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என செல்வோம்: ஜெயக்குமார்
தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை விஜய் வலியுறுத்தல்!
கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சென்னை தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!
அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்.. நவ., 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழ்நாடு அரசு!
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்!
கோவை விமான நிலையம் அருகே அதிர்ச்சி... மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
'NO' சொல்ல தயக்கமா?.. தயங்காமல் சொல்லுங்க.. சொல்ல வேண்டிய இடத்தில்!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே.. இரவானால் பகல் ஒன்று வந்திடுமே!
{{comments.comment}}