விஜய்யை மட்டும் தொடர்ந்து குறி வைத்து விமர்சிக்கும் சீமான்... லேட்டஸ்ட் விளாசல் இதோ!

Sep 12, 2025,06:14 PM IST

ராமநாதபுரம்: விஜய் கட்சி தொடங்கியது முதல் விஜய்யை மட்டுமே குறியாக வைத்து நாம் தமிழர் கட்சி ஓருங்கிணைப்பாளர் கடுமையாக விமர்சித்துப் பேசி வருகிறார்.  அவரது தொடர் விஜய் விமர்சனப் பேச்சுக்கள் பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.


ராமநாதபுரத்தில் நடந்த எது நமக்கான அரசியல் என்ற நிகழ்ச்சியில் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசினார். அத்துடன் விஜய் போல் நடித்து காட்டியும் பேசினார். இந்த நிகழ்ச்சி முழுவதும் விஜய்யை ஒருமையிலேயே விமர்சித்து பேசினார். 


மேலும் சீமான் பேசுகையில், திமுகவை தோற்றியவர் பேரறிஞர் அண்ணா. அதிமுகவை தோற்றுவித்தவர் எம்ஜிஆர். இந்த 2 பேருடைய படத்தை வைத்துக்கொண்டு வரலாறு திரும்புகிறது என்றால்  எப்படி. நீங்கள் தான் திரும்ப வேண்டும். கொள்கை தலைவர் என நீங்கள்  அறிவித்துள்ளவர்களின் கொள்கை பற்றி பேச வேண்டாமா? காமராஜர் கொள்கை தலைவர் என்றால் யார் காமராஜர் என்று 10 நிமிடம் பேசுங்கள், வேலு நாச்சியார் யார் என்பதை 10 நிமிடம் பேசுங்கள்.  திருச்சியில் பேசுறதுக்கு 10 நிமிடம் தான் கேட்டு இருக்காங்க. அரசு பேசுறதுக்கு கூட ஒரு 5 நிமிசத்தைக் கொடுத்திருக்கிறது. இந்த 10 நிமிடம் வரை பேசுவதற்கு வரும் சனிக்கிழமை வரை மனப்பாடம் செய்ய வேண்டும். நடித்துப் பார்த்து வந்து பேச வேண்டும். பிக்பாஸ் மாதிரி ஜனங்கள் எல்லாம் விஜய் வருகிறார் என்கிறார்கள். 




வேட்டைக்கு தான் வெளியே வருவாராம். நீங்கள் வேடிக்கை காட்ட வருகிறீர்கள். வேடிக்கை பார்க்க அல்ல. ஒரு அடிப்படை தெரியாதா? நீங்கள் வேடிக்கை காட்ட வரும் சிங்கமாக இருக்கிறீர்கள்.  உறவு அளவில் நீங்களும் நானும் அண்ணன் தம்பி இல்லை என்கிறோமா?, இல்லை சண்டை போடுகிறோமா? விஜய் பேச்சை கேட்டிருக்கீங்களா எவனாவது விஜய் பேசுறதை உட்கார்ந்து கேட்டிருக்கிறீர்களா? தியேட்டரில் பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோவில் ரசிகர்கள் கத்துற மாதிரிதான்! உங்களுக்கு நண்பா, நண்பி, எனக்கு தம்பி தங்கை! அவர்களின் எதிர்காலத்திற்குத்தான் நான் போராடி கொண்டிருக்கிறேன். 


பாஜக உங்கள் கொள்கை எதிரி என்கிறீர்கள். முதலில் உங்கள் கொள்கையை சொல்லுங்கள், அப்புறம் நான் எதிரியா இல்லையானு பார்க்கிறேன். எந்த அரசியலில் முரண்படுகிறீர்கள்? பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் என்ன கொள்கை வேறுபாடு என்று சொல்லுங்கள். பாஜக, காங்கிரஸ், அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் கொடியில் வண்ணம் மாறும், எண்ணம் மாறாது, கொள்கை மாறாது. திமுகவுக்கு மாற்று எப்படி திமுகவாக இருக்க முடியும்? 


மதுரை கிழக்கு விஜய். மதுரை மேற்கு விஜய். உசிலம்பட்டியில் வீரர்கள் நிறைய இருக்கிறார்கள் என்று யாரோ கூறியதை வைத்துக்கொண்டு, உசிலம்பட்டி விஜய் என்று கத்தி கூறுகிறார். அண்ணனை அமைதியாக விட்டு விட வேண்டும். என் முகம் தான் சின்னம் என்கிறார். 5 வருடத்தில் இந்த முகம் கேவலமாகி விடும் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!

news

ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு

news

அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி

news

மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்

news

திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்.. 2026ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்: தவெக தலைவர் விஜய்

news

Aadhar update ஆதாரில் இன்று முதல் புதிதாக நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் பற்றி தெரியுமா?

news

டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹன் போபண்ணா அறிவிப்பு

news

ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

news

தமிழ்நாடு என்றால் தமிழ் என்ற அடையாளத்தை தமிழகம் இழந்து வருகிறது: அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்