திமுகவும் பாஜகவும் கள்ள கூட்டணியில் அல்ல... நல்ல கூட்டணியில் தான் உள்ளார்கள்.. சீமான்

Nov 18, 2024,04:55 PM IST

திருச்சி: பாஜக ஆளும் மாநிலம் முதல்வர்களையோ அமைச்சர்களையோ சந்திக்க நேரம் ஒதுக்காத பிரதமர் மோடி தமிழக முதலமைச்சர் மற்றும் அவரது மகனான தமிழக விளையாட்டு துறை அமைச்சரை சந்திக்க நேரம் ஒதுக்குகிறார். காலையில் அப்பா சந்தித்தால், மாலையில் மகன் சந்திக்கிறார். திமுகவும் பாஜகவும் கள்ள உறவில் அல்ல. நல்ல உறவில் நேரடி கூட்டணியில் தான் இருக்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 88வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரின் உருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்தார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், ஆட்சியாளர்கள் தன் ஆட்சி சிறப்பாக இருக்கிறது எனக் கூறினால் அந்த ஆட்சி கொடுமையாக இருக்கிறது என்று தான் அர்த்தம். 


மக்கள் அவர்களாகவே வரவேற்க வந்தார்களா? அல்லது வர வைக்கப்பட்டார்களா?




தமிழக முதல்வர் தான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் திராவிடம் மாடல் ஆட்சி சூப்பர் என்று சொல்வதாக கூறியிருக்கிறார். என்னுடன் ஒரு முறை வாருங்கள் நானும் ஆய்வுக்கு போகிறேன். மனுக்களை கொடுத்து விட்டு கவலை கண்ணீருடன் மக்கள் கதறுவதை ஒரு முறை கேளுங்கள். ஆய்வுக்கு செல்லும் பொழுது மக்கள் வரவேற்கிறார்கள் என்று கூறுகிறார். அவர்களாகவே வரவேற்க வந்தார்களா? அல்லது வர வைக்கப்பட்டார்களா?. காசு கொடுத்து மக்களை அழைத்து வந்து சாலையின் இரு புறங்களிலும் நிறுத்தி வைக்கின்றனர். மக்கள் அவர்களாக வருவதில்லை.


2026 நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டி


இந்த தலைவன் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று மக்கள் முதல்வரை பார்க்க வருவதில்லை.திமுக-தவெக  கூட்டணி குறித்து எல்லாம் என்னிடம் கேட்கக் கூடாது.நாங்கள் என்ன செய்கிறோம் அதை கேளுங்கள். நாங்கள் 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து தான் போட்டியிடுவோம். நாம் தமிழர் கட்சி வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. அதற்கான வேலைகளை செய்து வருகிறோம். 2026 நாங்கள் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம். அதில், 117 பெண்களுக்கும் 117 ஆண்களுக்கு வாய்ப்பு கொடுப்போம்.100 இளைஞர்கள், இளம்பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்க இருக்கிறோம். கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம் என்கிற கொள்கையுடையவன் நான்.


திமுகவினரிடம் எந்த ரெய்டும் ஏன் வரவில்லை? 


இந்தியாவில் பாஜக, ஆளாத மாநிலங்களான ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன், டில்லியில் கெஜ்ரிவால், தெலங்கானாவில் முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் வீடுகளில் எல்லாம் அமலாக்கத்துறை ரெய்டு நடத்துகிறார்கள். ஆனால், தமிழகத்தில் ஆளும்  கட்சியான திமுகவினரிடம் எந்த ரெய்டும் ஏன் வரவில்லை? அவர்களுக்கு வராது. அதற்கு காரணம் அவர்கள் கறைபடியாத கரம் என்பதல்ல.  கப்பம் சரியாக கட்டிக் கொண்டு உள்ளார்கள் என்று அர்த்தம்.


திமுக-பாஜக கூட்டணியில் தான் இருக்கிறார்கள்


பாஜக ஆளும் மாநிலம் முதல்வர்களையோ அமைச்சர்களையோ சந்திக்க நேரம் ஒதுக்காத மோடி தமிழக முதலமைச்சர் மற்றும் அவரது மகனான தமிழக விளையாட்டு துறை அமைச்சரை சந்திக்க நேரம் ஒதுக்குகிறார். காலையில் அப்பா சந்தித்தால், மாலையில் மகன் சந்திக்கிறார். திமுகவும் பாஜகவும் கள்ள உறவில் அல்ல. நல்ல உறவில் நேரடி கூட்டணியில் தான் இருக்கிறார்கள். அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும்போதே கட்சியின் நிகழ்ச்சிக்கு அழைத்து பாஜக வரவில்லை. ஆனால், திமுக கூட்டணியில் இல்லாத போதும் கருணாநிதி நினைவு நாணயம் வெளியிட்டு விழாவிற்கு வருகின்றனர்.  இதன் மூலம் பாஜகவுடன் யார் நெருக்கமான கூட்டணி வைத்துள்ளார் என்பதை நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்