- -வர்ஷினி
சென்னை: இயக்குனர் சீனு ராமசாமி நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்பதே சமூக நீதி என்பது அனைத்து சமூகத்திற்கும் பொருந்தும் என்பதை உரக்கச் சொல்லும் புதிய திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் சீனு ராமசாமி.
சென்னையில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. தங்கம் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சீனு ராமசாமி. விஜய் கார்த்திக் எழுதி இயக்குகிறார். இப்படத்தின் ஒளிப்பதிவை ஏ எஸ் சூர்யா கவனிக்க படத்தொகுப்பை விபி வெங்கட் கையாளுகிறார். எஸ் ஆர் ஹரி இசையமைக்கிறார்.
தேசிய விருது பெற்ற வெற்றி பட இயக்குனரான சீனு ராமசாமி பல்வேறு கலைஞர்களை வெற்றி நாயகர்களாக மாற்றிய பெருமைக்குரியவர். விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், சுனைனா என பலரை இதில் சொல்லலாம். தென் மேற்குப் பருவக் காற்று, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, மாமனிதன் ஆகியவை இவரது இயக்கத்தில் வெளியான சில அற்புதமான படங்கள்.
தர்மதுரை படத்தில் ஒரு காட்சியில் வந்து போயிருப்பார் சீனு ராமசாமி. இப்போது முக்கியாமான பாத்திரத்தில் அவர் நடிக்கவுள்ளார். இப்படத்தின் கதாநாயகனாக அருண் நடிக்க அவரது ஜோடியாக நிரஞ்சனா நடிக்கிறார். இவர்களுடன் யூடியூப் புகழ் விஜய் டியோ ஹிமோர் ரூஸ்வெல்ட் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பில் நூற்றுக்கணக்கான துணை நடிகர், நடிகைகள் பங்கு பெற்ற முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. தொடர்ந்து விழுப்புரம், கோவை ,பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
புதிய சமுதாய மாற்றத்திற்கான வழிகாட்டியாக இப்படம் அமையும் என்று இயக்குனர் விஜய் கார்த்திக் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார். மேலும் இப்படம் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்பதே சமூகம் நீதி என்ற கருத்தையும் ஆழமாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்யும் என கூறினார்
தமிழ்நாட்டில் இன்று முதல் மே 4 வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!
மே 4ல் அக்னி நட்சத்திரம்.. வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!
கலவரத்தை தூண்டும் வகையில் வீடியோ.. பாகிஸ்தான் youtube சேனல்களுக்கு மத்திய அரசு தடை
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
அட்சய திருதியை முன்னிட்டு.. தங்கத்தின் விலை தொடர் சரிவு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
Swearing in: அமைச்சராக இன்று மாலை பதவி ஏற்கிறார்.. மனோ தங்கராஜ்
ஜனாதிபதி கையால் பத்மபூஷன் விருதை பெற.. குடும்பத்துடன் டெல்லிக்கு கிளம்பினார்.. நடிகர் அஜித்!
Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!
அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை
{{comments.comment}}