சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மிகப் பெரிய முக்கியத் தலைவராக ஒரு காலத்தில் விளங்கியவர் கு. செல்வப்பெருந்தகை.. இன்று தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது, ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்குக் கிடைத்துள்ள புதிய பெருமையாக அமைந்துள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவது முதல் முறையல்ல என்றாலும் கூட செல்வப்பெருந்தகையின் நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது.
வட தமிழ்நாட்டின் முக்கிய தலித் தலைவர்களில் ஒருவர்தான் செல்வப்பெருந்தகை. பூவை ஜெகன் தொடங்கிய புரட்சி பாரதம் கட்சியில் ஆரம்பத்தில் இணைந்து செயல்பட்டார். பின்னர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார். இக்கட்சியில் இருந்தபோது 2006ம் ஆண்டு மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்டசபைக்கு முதல் முறையாகப் போனார். அதன் பிறகு செங்கம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் 2 முறை போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் திருமாவளவனின் வலது கரமாகவே செயல்பட்டு வந்தார் செல்வப் பெருந்தகை. அப்போது அவரது பெயர் வெறும் செல்வம்தான். பின்னர்தான் தனது பெயரை செல்வப் பெருந்தகை என்று மாற்றிக் கொண்டார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அரசியல் சக்தியாக மாற்ற திருமாவளவன் கடுமையாக போராடிக் கொண்டிருந்தபோது அவருக்கு மிகப் பெரிய உதவியாக இருந்தவர் செல்வப்பெருந்தகை. அதன் பின்னர் திருமாவுடன் மனக் கசப்பு ஏற்படவே, செல்வப்பெருந்தகை பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். மாநிலத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். அங்கு அவருக்கு செட் ஆகவில்லை. இதையடுத்து காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸில் பயணித்து வரும் அவர் கடந்த சட்டசபைத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இப்போது மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இடத்துக்கு நிச்சயமாக உதயநிதி வருவார்: துரைமுருகன் புகழாரம்!
இளைஞர்களை ரவுடிகளாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி...பிரதமர் கடும் குற்றச்சாட்டு
நடிகை கௌரி கிஷனின் உடல் எடை குறித்த கேள்வி... வருத்தம் தெரிவித்து யூடியூபர் வீடியோ வெளியீடு!
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் ஆரம்பம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து.. வெளியேறுகிறாரா சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கேவுக்கு வருவாரா?
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!
மனித நேயமும் மாற்றுத்திறனாளிகளும்.. தன்னம்பிக்கையும், தைரியமும் அவர்களை வழி நடத்தும்!
வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விலை நிலவரம்!
{{comments.comment}}