நீண்ட நாட்களுக்கு பின்னர் நடிகர் செந்தில் கதையின் ஹீரோவாக நடித்திருக்கும் படம் வாங்கண்ணா வணக்கங்கண்ணா. இருபது நாட்களுக்குள் இந்தப் படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.
நீண்ட நாட்களுக்கு பின்னர் இந்தப் படத்தில் நகைச்சுவை நடிகர் செந்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். ஹீரோவாக சுந்தர் மஹா ஸ்ரீ , சந்தியா ராமசுப்பிரமணியன் ,அபினய ஸ்ரீ இருவரும் முதன்மைக் கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். வில்லியாக நதியா வெங்கட் நடிக்கிறார். இந்தப் படம் ஒரே நாளில் நடக்கும் கதையில் உருவாகிறது. முழுக்க முழுக்க காமெடி கலந்த கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் மொத்தம் 5 பாடல்கள் உள்ளன.

எழுத்து, இயக்கம் ராஜ் கண்ணாயிரம். கதை, திரைக்கதை, வசனம் சுந்தர் மஹாஸ்ரீ எழுதியுள்ளார். இப்படத்திற்கு வெங்கட் முனிரத்னம் ,ஏ சி மணிகண்டன், ஸ்ரீநாத் ஒளிப்பதிவு செய்துள்ளனர். படத்தொகுப்பு ரமேஷ் மணி, ஜோஸப் சந்திரசேகர் இப்பத்திற்கு இசையமைத்துள்ளார்.
இது சமூக வலைதள காலம்.. யூடியூபர்கள்தான் கலக்கி வருகின்றனர். அந்த வகையில் ஒரு எம்.எல்.ஏ.வுக்கும் ஒரு யூ டியூபருக்கும் இடையில் நடக்கும் பிரச்சினையை மையப்படுத்தி உருவாகியுள்ளது. யூ டியூபர் எம்.எல்.ஏ.வின் கோபத்துக்கு ஆளாகிறார். இந்தப் பிரச்சனையில் இருந்து இருபத்தி நாலு மணிநேரத்திற்குள் அந்த யூ டியூபர் தப்பினாரா.. இல்லையா.. என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

இருபது நாட்களுக்குள் இந்தப் படத்தின் மொத்தப் படப்பிடிப்பு நிறைவடைந்தது . செந்தில் காமெடியில் கலக்கும் நபர். இந்தப் படத்தில் கதை நாயகனாக எப்படி அசத்தியிருக்கிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பார்க்கலாம்.
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}