சென்னை: அதிரடியாக நேற்று உயர்ந்த தங்கம் இன்று உயர்ந்தே உள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ரூ.54.920க்கும், ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.40 அதிகரித்து ரூ.6,865க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது.
செப்டம்பர் 12ம் தேதி சவரனுக்கு ரூ.80 குறைந்திருந்த தங்கம், செப்டம்பர் 13ம் தேதி அதிரடியாக சவரனுக்கு ரூ.960 உயர்ந்தது. நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தங்கம் மற்றும் வெள்ளி விலையில் பெருளவில் எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்த நிலையில் தங்கம் விலை நேற்றும் இன்றும் மட்டும் சவரனுக்கு ரூ.1280 உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆவணி மாதம் தொடங்கியதில் இருந்து தங்கம் விலை பெரிய அளவில் ஏற்றமும் இன்றியும், இறக்கமும் இன்றியும் இருந்து வந்தது. ஆவணி மாதம் இறுதியில் நகை விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை...

சென்னையில் இன்றைய தங்கம் விலையை பெருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் கிராமிற்கு ரூ.40 அதிகரித்து ரூ.6,865 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 54,920 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.68,650 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.6,86,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,489 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.59,912 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.74,890 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,48,900க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,865க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,489க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,880க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,504க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,865க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,489க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,865க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,489க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,865க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,489க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,865க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,489க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,870க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,494க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை
நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 3.50 காசுகள் அதிகரித்து ரூ.95க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், இன்று கிராமிற்கு ரூ.2 அதிகரித்து ரூ.97க்கு விற்கப்படுகிறது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 776 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.970 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,700 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.97,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்: செப்டம்பர் 01 முதல் செல்போன்களுக்குத் தடை
முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பி.,க்கள் கூட்டம்: 37 எம்.பி.க்கள் புறக்கணிப்பு
முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த எம்.பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு.. தேமுதிகவும் வராது
கரூர் அரசுப் பணி ரத்து வழக்கு: வரும் 14-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணை
இலங்கை டெஸ்ட் தொடர்: காயத்தால் சாய் சுதர்சன் விலகலா?
‘ஃபார்ச்சூன்’ நிறுவனத்திற்கு அபராதம்: தரம் குறைந்த எண்ணெய் விற்பனையால் நடவடிக்கை
10 நிமிட டெலிவரி ஆப்களும்... ஓவர் 'ஸ்மார்ட்' வாடிக்கையாளர்களும்!
செக் மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!
கத்திக் கரைகிறது கூட்டமாக சேர்ந்து
{{comments.comment}}