டெல்லி: ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கு , இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி, ஜிம்பாப்வே செல்லவுள்ளது. அங்கு இரு அணிகளுக்கும் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது.
முதல் டி20 போட்டி ஜூலை 6ம் தேதி நடைபெறும். 2வது போட்டி 7ம் தேதியும், 3வது போட்டி 10ம் தேதியும், 4வது போட்டி 13ம் தேதியும், 5வது போட்டி 14ம் தேதியும் நடைபெறவுள்ளன. அனைத்துப் போட்டிகளும் ஹராரேவில் நடைபெறும். அனைத்துப் போட்டிகளும் பிற்பகல் 1 மணிக்குத் தொடங்கும். இந்திய நேரப்படி இது மாலை 4.30 மணி ஆகும்.

இப்போட்டித் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது. 15 பேர் கொண்ட இந்திய அணியின் தலைவராக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார். முற்றிலும் இளைஞர்களைக் கொண்ட இரண்டாம் நிலை அணியை இந்தியா, ஜிம்பாப்வேக்கு அனுப்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி விவரம்:
சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருத்துராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜுரல் (விக்கெட் கீப்பர்), நிதீஷ் ரெட்டி, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே.
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
வாயை மூடு
உன் மொய் குழலுக்கு பூமாலை சூட்டவோ!
தண்ணிக்குள்ள ராஜா தான் தவழுகிறே மாசு தான்!
{{comments.comment}}