சிம் இனி கட்டாயம் சிம்ரன்.. வாட்ஸ் அப், டெலிகிராம், அரட்டை செயலிகளுக்கு அதிரடி உத்தரவு!

Dec 02, 2025,10:25 AM IST

சென்னை: இந்தியாவில் உள்ள வாட்ஸ் அப், டெலிகிராம், அரட்டை போன்ற மெசேஜிங் செயலிகளை பயன்படுத்துவதற்கான விதிமுறையில் மத்திய அரசு ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி இந்த செயலிகளை சிம் இல்லாமல் பயன்படுத்த முடியாது.


சைபர் குற்றங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த விதிமுறைகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலிகளை சிம் கார்டு இல்லாமலேயே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


வாட்ஸ் அப் என்பது மக்களிடம் தவிர்க்க முடியாத ஒரு செயலியாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் பல கோடி பேர் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். வாட்ஸ் அப் வழியாக குறுஞ்செய்தியும், அழைப்புகளையும் பயன்படுத்த முடியும். பல்வேறு வசதிகள் வாட்ஸ் ஆப்பில் உள்ளது. 




இந்த வாட்ஸ் அப்பை கணினி வழியாகவும் இணைந்து பயன்படுத்தலாம். ஆனால் இந்த வசதியை பயன்படுத்தி பல்வேறு வகையான மோசடிகள் நடைபெறுவதாக புகார்கள் அதிகரித்து கொண்டு வருவதால், அதை கட்டுப்படுத்தும் வகையில் வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.


இந்த ஆப்களை எந்த மொபைல் எண்ணில் நாம் பயன்படுத்துகிறோமோ ,அந்த சிம் கார்டு கண்டிப்பாக ஆக்டிவாக இருக்க வேண்டும். இல்லையென்றால் வாட்ஸ் அப் போன்ற அப்களை பயன்படுத்த முடியாமல் போகலாம். கணினியில் பயன்படுத்துபவர்களுக்கு ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கு தானாகவே லாக் அவுட் ஆகிவிடும். அதன் பிறகு கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து லாக் இன் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுள்ளது.


(வே.தங்கப்பிரியா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்.. சிறைப்பட்டார் செக்கிழுத்தார் அது செக்கல்ல!

news

ஆசிரியர் ஓர் அகல்விளக்கு

அதிகம் பார்க்கும் செய்திகள்