காங்கேயம் : சிவன்மலை, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், இன்று (25.02.2025) செவ்வாய்க்கிழமை) வைக்கோல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என பக்தர்கள் ஆவலாக கேட்க துவங்கி உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உள்ள சிவன்மலை மிகவும் புகழ்பெற்றதாகும். பெயர் தான் சிவன்மலை. ஆனால் இந்த மலை சுப்பிரமணிசாமி என்ற திருநாமத்துடன் கோவில் கொண்டிருப்பது தமிழ் கடவுளான முருகப் பெருமான் தான். தமிழகத்தில் உள்ள மிகவும் புகழ்பெற்ற முருகன் கோவில்களிலும் இதுவும் ஒன்று. ஒவ்வொரு கோவிலிலும் ஒரு வழிபாடு சிறப்புக்குரியதாக இருக்கும். அப்படி சிவன்மலை ஆண்டவர் கோவிலில் புகழ்பெற்றது, இங்குள்ள ஆண்டவர் உத்தரவுபெட்டி தான்.
இங்கு முருகன் சன்னதி முன்புள்ள மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் ஆண்டவர் உத்தரவுப் பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. முருகப் பெருமான் ஏதாவது ஒரு பக்தர்களின் கனவில் சென்று, ஒரு பொருளை குறிப்பிட்டு அதை இந்த பெட்டியில் வைத்து வழிபடும் படி உத்தரவிடுவார். அந்த பக்தர் உடனடியாக சிவன்மலைக்கு சென்று அங்குள்ள கோவில் நிர்வாகத்திடம் அதை தெரிவிப்பார். அந்த பக்தர் சொல்வது உண்மை தானா? அவர் சொல்லும் பொருளை உத்தரவுப் பெட்டியில் வைக்கலாமா? என்பதை முருகனிடமே பூக்கட்டி போட்டு உத்தரவு கேட்பார்கள்.
வைக்கலாம் என முருகன் உத்தரவு அளித்த உடன் அந்த பொருள் ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்படும். இதற்கு தினமும் பூஜைகளும் நடத்தப்படும். அடுத்து மற்றொரு பக்தரின் கனவில் சிவன்மலை ஆண்டவர் உத்தரவு வரும் வரை முன்பு வைத்த பொருளையே வைத்து பூஜை செய்வார்கள். இது பல காலமாக இக்கோவிலில் நடைமுறையில் இருந்து வரும் வழக்கமாகும்.
ஆண்டவர் உத்தரவுப் பெட்டி என்றால் ஏதோ சாதாரண பெட்டி என நினைத்து விடாதீர்கள். இந்த கண்ணாடிப் பெட்டியில் என்ன பொருள் வைக்கப்படுகிறதோ அது தொடர்பான தாக்கங்கள் உலக அளவிலோ அல்லது நாட்டிலோ எதிரொலிக்கும். இதற்கு முன் மஞ்சள் வைத்து வழிபட்ட போது மஞ்சள் விளைச்சல் அமோகமாக இருந்தது. தண்ணீர் வைத்து வழிபட்ட போது சுனாமி வந்தது. துப்பாக்கி வைத்து வழிபபட்ட போது கார்கில் போர் நடந்தது. இதற்கு முன் சமீபத்தில் மண் அகல் விளக்கு வைத்து வழிபட்ட போது திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டது.
ஒவ்வொரு முறையும் பக்தர் கனவில் ஒரு பொருள் தோன்றும். அதனை சிவன்மலை ஆண்டவர் சந்நிதி முன்பு பூ கேட்டு உறுதிப்படுத்துவார்கள். உத்தரவுப்பெட்டியில் வைக்கப்படும் பொருளானது சமுதாயத்தில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படி, இன்று வைக்கோல் வைக்கப்படுள்ளது. இதனால் மழை வளம் சிறந்து, விவசாயம் செழிப்பதுடன், கால்நடைகளுக்கு தேவைப்படும் தீவனப் பயிர்கள் விளைச்சல் நன்றாக இருக்கும் என நம்பப்படுகிறது. வைக்கோல் என்பது பணத்தை ஈர்க்கும் ஒரு பொருளாகும். இதனால் நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கு முன் திருவோட்டில் திருநீறு, ருத்ராட்சம், திருப்புகழ் புத்தகம் வைத்து வழிபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
களை கட்டியது தவெக மாநில மாநாடு... சாலை மார்க்கமாக மதுரை வந்தடைந்தார் விஜய்!
பாஜக தேர்வு செய்த வேட்பாளர் தமிழர் என்பதாலேயே ஆதரிக்க முடியுமா?: திமுக எம்பி கனிமொழி!
சபாஷ் செம போட்டி.. துணை ஜனாதிபதி தேர்தலில்.. ஆப்பை அப்படியே பாஜக பக்கம் திருப்பி விட்ட காங்.!
ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் கூட்டத்தை போட்டுவிட்டு ஓட்டுனரை மிரட்டுவதா?: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
உப்பு அதிகம் சாப்பிட்டால் கிட்னி பாதிக்கப்படுமா.. மருத்துவர்கள் சொல்வது என்ன?
அன்புமணி பதிலளிக்க தவறினால் என்ன நடக்கும்?.. டாக்டர் ராமதாஸின் அடுத்தடுத்த அதிரடி!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்சன் ரெட்டி தேர்வு!
சிறுநீரகக் கொள்ளை தீரும் முன்பே கல்லீரல் திருட்டு.. இது தான் திமுகவின் சாதனையா?: டாக்டர் அன்புமணி
மும்பையை உலுக்கி எடுத்த கன மழை.. நவி மும்பையின் பல பகுதிகளில் வெள்ளக்காடு!
{{comments.comment}}