பொய்!

Oct 13, 2026,11:28 AM IST

- சிவசத்தியா, காரைக்குடி


உவர்ப்பில்லாமல் 

உணவில்லை

உணவில்லாது

உவர்ப்பில்லை


இவையில்லாது 

சுவையில்லை

சுவையில்லாது

நாமில்லை


நாமில்லாது

பொய்யில்லை

பொய்யில்லாது

நாமில்லை




இரவில்லாது 

பகலில்லை

பகலில்லாத 

இரவில்லை


நிலவில்லாது

ஒளியில்லை

ஒளியில்லாத 

வானமில்லை


கருவாயின்றி

வெள்ளுவாயில்லை

வெள்ளுவாயின்றி

கருவாயில்லை


ஆணின்றி 

பெண்ணில்லை

பெண்னின்றி

ஆணேயில்லை


உயிர்கள் படைப்பே உலகு 

உலகின்றி உயிர்களேது?


உயிர்களின்றி 

இறைவனேது?"

இறைவனில்லையேல்

உயிர்களேது?" 


உயிருக்குள் உயிராய்

உயிரே வாழ்வாய் 

வாழ்வே உணர்வாய்

உணர்வே உண்மையாய்


உண்மையே 

உயர்வாய்

தெளிவாய் 

அறிவாய்


மனமே

அடித்தளமனைத்தையும்

ஆட்கொள்ளும்


மாயைய் பொய்

நிறைந்தது

போர்களமானது

நிலையற்ற


ஆசையைப் 

பேராசையாய்

மாற்றிடும் 

அழித்திடும்


இயற்கைக்கு

ஒவ்வாது

தொடர்ந்திடும்

பொய்யதனால்


பேரிடராய் விளையும்

பெருந்துன்பம்

வாழ்வில் அறிவாய்

மானிடா அரிவாய்


நிறைமனமாய்

நிறைத்து.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அறுபடை வீடுகளுக்கு நிகரான.. சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

news

பொய்!

news

குடும்பம் என்பது ஒரு புத்தகம்.. சிறு பிழைகள் வரலாம்.. திருத்திக் கொண்டு படிக்க வேண்டும்!

news

அதிமுகவில் இருந்து மேலும் 15 பேர் தவெகவுக்கு வருகிறார்கள்: அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!

news

Thentamil தலையங்கம்: எங்க வழி தனி வழி.. அரசியல் கணக்குகளும்.. திமுகவின் புதிய பாதையும்

news

திடீர் உடல்நலக்குறைவு: இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச மருத்துவமனையில் அனுமதி!

news

6 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

news

புதிய ஆளுநர்கள் நியமனம்: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநரானார் ராஜேந்திர அர்லேகர்

news

அடுத்த 3 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்