மகன் .. அழகிய செடிக்கு மலரை அளிக்கும் உயிர் படைப்பு!

Oct 11, 2026,02:27 PM IST
- சிவசத்தியா, காரைக்குடி

மகன்
நம்பிக்கை

தாய்மையின்
அங்கீகாரம். 

வாழ்க்கையின்
ஆதாரம். 

பெற்றோரின்
பாதுகாப்பான
உணர்வு.

மரணம் வரை 
முத்தமிடும்
முகில். 

காற்று 
போல்
மனம் முழுதும்
நிறைந்தவன். 

உடலால் 
உயிரால்
உருவான
பந்தம். 



காற்று வெப்பம் 
நீர் அவசியம் 
மனிதனுக்கு இன்றியமையாதவன் 
பெற்றோர்க்கு
அவன்.

ஆயுள் வரை
உத்தரவாதம்
அன்பில் 
916 கியாரண்டி.

உலகின்
மகிழ்ச்சியான
இடம்
அவனின் 
மடி. 

இறையின் 
குருவின் மறு
உருவம். 

ஆண்மை 
என்பதும்
ஆளுமை
என்பதும்
அவனே. 

உலகின்
உன்னத
அட்சயப்பாத்திரம். 

அழகிய செடிக்கு மலரை
அளிக்கும்
உயிர் படைப்பு. 

உள்ளத்தில் 
அர்த்த 
நாரீஸ்வரன். 

மென்மை உறுதி 
தனக்குள்ளே
அமையப் பெற்றவன். 

முழுமையை
நோக்கி
நகர்பவன். 
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்