கடலூரில்.. பாம்பு பிடித்த தன்னார்வலர் உயிழப்பு: எப்படி தெரியுமா?

Apr 13, 2024,03:59 PM IST

கடலூர்: தீயணைப்புத்துறையினரால் பிடிக்கப்பட்ட பாம்பை காட்டில் விடுவதற்காக டப்பாவில் அடைத்த போது, பாம்பு கடித்ததினால் தன்னார்வலர் உமர் அலி என்பவர் உயிரிழந்தார்.


கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் உமர் அலி. இவருக்கு வயது 36. உமர் அலி வனத்துறையினர்களுடன் சேர்ந்து பாம்பு பிடிக்கும் பணியில் கடந்த 12 வருடமாக ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று பண்ருட்டி முத்தையா நகரில் கனகராஜ்  என்பவரது வீட்டில் நல்ல பாம்பு புகுந்துள்ளது. கனகராஜ் தகவல் கொடுத்ததன் பேரில் தீயணைப்பு துறையினர் அங்கு சென்றுள்ளனர். 




அந்த பாம்பினை லாவகமாக தீயணைப்பு துறையினர் பிடித்தும் விட்டனர். அப்போது அங்கு வந்த உமர் அலி பாம்பினை நான் காட்டில் விட்டு விடுகிறேன் என்று கூற, தீயணைப்பு துறையினரும் பாம்பினை அவரிடம் கொடுத்துள்ளனர். அந்த பாம்பை தன்னுடைய டப்பாவிற்கு மாற்றும் போது அந்த பாம்பு உமர் அலியை கடித்துள்ளது. கடித்தது நல்ல பாம்பு என்பதால் தியணைப்பு வீரர்கள் உமர் அலியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 


பண்ருட்டி மருத்துவமனையில் அவருக்கு  முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு  செல்லும் வழியிலேயே உமர் அலி இறந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.. ஆளுநர் உரையில் இடம் பெற்ற அதிரடி அறிவிப்பு

news

ஆளுநர் உரை எப்படி இருந்தது? உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில்

news

எந்த கொம்பனாலும் அதிமுக.,வை அசைக்க முடியாது : இபிஎஸ் உறுதி

news

அடுத்த வாரம் மின்வாரிய வெள்ளை அறிக்கை...அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு

news

உலக யோகா தின விழா: மாணவர்களுக்கு யோகாவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு

news

ஐக்கிய அரபு அமீரகத்தில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சோஷியல் மீடியா பயன்படுத்த தடை

news

இன்று ஒரு புதிய உதயம்...ஆளுநர் நெகிழ்ச்சி பதிவு...எதுக்கு தெரியுமா?

news

நீண்ட இடைவெளிக்குப் பிறகு.. ஆளுநர் உரையை முழுமையாக படித்தார் ஆளுநர் ஆர்லேகர்!

news

எம்மை குளிர்விக்க வந்தவளே....!

அதிகம் பார்க்கும் செய்திகள்