சென்னை: தமிழ்நாட்டில் எது சரியாக நடக்கிறதோ இல்லையோ.. இந்த எக்ஸ் தளத்திலும் பிற சமூக வலைதளங்களிலும் ஹேஷ்டேக் போட்டு விளையாடுவது மட்டும் எப்போதும் இல்லாமல் இருக்காது. அதில் மட்டும் தமிழ்நாட்டுக்காரங்களை குறிப்பாக அரசியல் கட்சிகளை, சினிமா நடிகர்களின் ரசிகர்களை அடிச்சுக்கவே முடியாது.
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், எப்போதுமே இதில் தமிழ்நாடு டாப்தான். ஏதாவது ஒரு பிரச்சினையை இழுத்து விட்டு அதை
வைத்து குறைந்தது இரண்டு நாளாவது ஊறப் போட்டு ஊறப் போட்டு அடிப்பது நம்மவர்களுக்குக் கை வந்த கலை. இதில் என்ன விசேஷம்னா.. இந்த டிவிட்டர் அடிதடியில் சிக்கி பல முக்கியமான பிரச்சினைகளை மக்கள் மறந்து விடுவார்கள் அல்லது பிரச்சினைகள் அவர்களுக்கு மரத்துப் போய் விடும்.
காட்டுத் தீ போல பற்றி எரிந்த பல பிரச்சினைகளை பொசுக்கென்று அணைத்து ஓரம் கட்டி விரட்ட விட்ட பல பெருமை இந்த ஹேஷ்டேக் போர்களுக்கு உண்டு. எத்தனை எத்தனை பிரச்சினைகள் எல்லாம் எப்படி எப்படி மறந்து போயின.. எங்கு ஓடிப் போயின.. என்னவாயின என்று ஆய்வு செய்தால் பல நூறு புத்தகங்கள் எழுதலாம்.
சரி அதை விடுங்க.. கடந்த 3 நாட்களாக தமிழ்நாடு பற்றி எரிந்து கொண்டு வருகிறது.. அதாவது தமிழ்நாட்டு அரசியல் களம்தான்.. மக்கள் அல்ல.. அவர்கள், அவர்களது அன்றாட பிரச்சினைகளில் சிக்கித் தவித்து தத்தளித்துக் கொண்டு, வழக்கம் போல வாழ்ந்து கொண்டுள்ளனர். அரசியல்வாதிகளும், அவர்களது தொண்டர்களும்தான் இந்த சமூக வலைதளப் போரில் படு ஜாலியாக ஈடுபட்டுக் கொண்டுள்ளனர்.
பிரச்சினை நம்பர் 1 + ஹேஷ்டேக் நம்பர் 1
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது பேட்டியின்போது தமிழ்நாட்டுக்கு நிதி அளிக்காமல் மத்திய அரசு வஞ்சகம் செய்கிறது. இது தொடர்ந்தால், கெட் அவுட் மோடி என்று மக்கள் சொல்வார்கள் என்று கூறியிருந்தார். இதனால் வெகுண்டெழுந்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, சற்று கடுமையாகவே உதயநிதி ஸ்டாலினை விமர்சித்திருந்தார். உனக்குத் தைரியம் இருந்தால் சொல்லிப் பாரு என்றும் அவர் ஒருமையில் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்திருந்தார்.
அவ்வளவுதான் நேற்று முன்தினம் மாலையில் தொடங்கியது #GetOutModi ஹேஷ்டேக் மோதல். நேற்று முழுவதும் அது எக்ஸ் தளத்திலும் பிற சமூக வலைதளங்களிலும் டிரெண்ட் ஆகியது. இதனால் அரசியல் வட்டாரம் பரபரப்பானது. சும்மா கிடந்த திமுகவினரை அண்ணாமலைதான் தூண்டி விட்டு விட்டார் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
பிரச்சினை நம்பர் 1 + ஹேஷ்டேக் நம்பர் 1
இந்த நிலையில் நேற்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலையிடம் இந்த ஹேஷ்டேக் குறித்து செய்தியாளர்கள் கேட்க அதே ஆவேசத்தோடு பேசினார் அண்ணாமலை. நாளை காலை (அதாவது இன்று) 6 மணியிலிருந்து நாங்களும் ஹேஷ்டேக் டிரண்ட் செய்கிறோம். #GetOutStalin என்று நானே தொடங்கி வைக்கிறேன் என்று அவர் கூறப் போக இன்று காலை முதல் அது தொடங்கி ஓடிக் கொண்டிருக்கிறது.
நடுவில் புகுந்த தவெக
இப்படி மாறி மாறி இரு கட்சிகளும் ஹேஷ்டேக் போட்டு ஓடிக் கொண்டிருக்கும்போது நடுவில் புகுந்துள்ளது தமிழக வெற்றிக் கழகம் கட்சி. அக்கட்சியினர் எங்களுக்கு இந்த பாயாசமும் வேண்டாம்.. பாசிசமும் வேண்டாம்.. மோடியும் வேண்டாம், ஸ்டாலினும் வேண்டாம் என்று கூறி புதிதாக, #GetOutModiandStalin என்ற புதிய ஹேஷ்டேக்கை டிரண்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
அரசியல்வாதிகளுக்கும், அரசியல் கட்சியினருக்கும் இப்படி டிரெண்ட் செய்து அன்றாட வேலைதான்.. அதை யாரும் கேள்வி கேட்க முடியாது.. கேட்கவும் யாருக்கும் நேரம் இல்லை. காரணம், இதை விட மிகப் பெரிய பிரச்சினைகள் மக்களுக்கு கழுத்து வரை உள்ளது. அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க ஆக்கப்பூர்வமான முறையில் அரசியல்வாதிகள் தங்களது பொன்னான நேரத்தை செலவிட்டால் உண்மையிலேயே மக்களுக்கு நிம்மதியாக இருக்கும்.
அதை விட்டு விட்டு இப்படி ஒரு பைசாவுக்கும் பிரயோஜனம் இல்லாமல் ஹேஷ்டேக் டிரெண்ட் செய்து என்ன சாதிக்கப் போகிறோம்?.. யோசிங்க அரசியல்வாதிகளே!
ஓய்வு பெற்ற எஸ்ஐ ஜாகிர் உசேன் கொலை வழக்கு.. யாரும் தப்ப முடியாது.. முதல்வர் மு க ஸ்டாலின்
வெயிலுக்கு ஒரு குட்டி பிரேக்.. தமிழ்நாட்டில் இன்று முதல் 25ஆம் தேதி வரை.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Chennai corporation budget: ரூ.5,145.52 கோடி பட்ஜெட்.. மேயர் பிரியா வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
பொது இடங்களில் உள்ள திமுக கொடிக் கம்பங்களை உடனடியாக அகற்றுங்கள்.. அமைச்சர் துரைமுருகன் உத்தரவு
நண்பா நீ விளையாடு.. நான் அம்பயரிங் பண்றேன்.. IPL Umpire ஆன விராட் கோலியின் டீம் மேட்!
அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுங்க: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்!
Chennai MTC.. ஏசி பஸ் உட்பட அனைத்து பேருந்துகளிலும்.. இனி ரூ.2000/- மாதாந்திர சலுகை பாஸ்!
தெரு நாய்களை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை .. மேயர் பிரியாவுக்கு கார்த்தி சிதம்பரம் கோரிக்கை
முடிந்தது 9 மாத தவிப்பு.. தரையிறங்கிய டிராகன்.. புன்னகையுடன் பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்
{{comments.comment}}