மொரட்டு தூக்கம் ஹார்ட்டுக்கு நல்லதாம்.. யாராச்சும் குறட்டை விட்டு நல்லா தூங்குனா.. எழுப்பாதீங்க!

Aug 31, 2024,05:53 PM IST

லண்டன் :   வார இறுதி நாட்களில் அதிகமாக தூங்குவதால் இதய பாதிப்பு குறைவதுடன், இதயம் பலப்படும் என லண்டனில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


தூக்கத்திற்கும், மனிதர்களுக்கு ஏற்படும் இதய நோய்க்கும் தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. வாரம் முழுவதும் பிஸியான வேலைகளால் பலருக்கும் இரவில் தூக்கம் பாதிக்கப்படுவது உண்டு. ஆனால் ஒரு மணிதன் தினமும் இரவில் குறைந்தபட்சம் 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் வார நாட்களில் இப்படியான தூக்கத்திற்கு வாய்ப்பு இல்லாதவர்கள், வார இறுதி நாட்களில் அதிகமான நேரத்தை தூக்கத்திற்காக செலவிடுகிறார்கள்.




வார இறுதி நாட்களில் இது போல் முரட்டுத்தனமாக தூங்குவது உடலுக்கு கெடுதலை ஏற்படுத்தும் என பலரும் சொல்லி கேள்விபட்டிருக்கிறோம். இந்நிலையில் வார இறுதி நாட்களில் அதிக நேரம் தூங்குவதால் மனிதனுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகிறது? குறிப்பாக இதயத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை கண்டறிவதர்காக லண்டன் இதயவியல் கழகம் ஒரு ஆய்வை நடத்தியது. மொத்தமாக 90.903 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 


வார இறுதி நாட்களில் அதிகமான நேரம் தூங்குபவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் அபாயம் 19 சதவீதம் வரை குறைவதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இதே போன்ற ஆய்வு சீனாவிலும் நடத்தப்பட்டுள்ளது. குறைவான தூக்கம் உடல்நலத்தை பாதிக்கும் என்றால், அதிகமான தூக்கம் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கண்டறிவதற்காக தான் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 


2019ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் இது போல் அதிக நேரம் தூங்குவதால் நொறுக்கு தீனி சாப்பிடும் பழக்கம் அதிகரித்து, உடல் எடையும் அதிகரிப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது நடத்தப்பட்டுள்ள ஆய்வில, வார இறுதி நாட்களில் 16 மணி நேரம் வரை தூங்குபவர்களுக்கு இதய பாதிப்பு 19 சதவீதம் குறைவு. இதனால் வார நாட்களில் ஏற்படும் குறைவான தூக்கம், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை இது சமன் செய்து விடுவதாக சொல்லப்படுகிறது. சரியாக தூங்குவதால் உடல்பருமன் அபாயம் ஏற்படுவதை குறைத்து விட முடியாது. 




அமெரிக்காவில் வசிப்பவர்களில் 42 சதவீதம் பேர் மட்டும் தான் போதுமான அளவிற்கு தூங்குகிறார்கள். ஆனால் 57 சதவீதம் பேர், வார இறுதியில் அதிக நேரம் தூங்குவதால் மட்டுமே தான் உற்சாகமாகவும், ஆரோக்கியமாகவும் உணர்வதாக தெரிவித்துள்ளனர்.


பிறகென்னப்பா.. வார இறுதி நாட்களில் உங்க வீட்டுல யாராச்சும் நல்லா இழுத்துப் போர்த்திக்கிட்டு சூப்பரா தூங்கினா.. அப்படியே விட்ருங்க.. தட்டி எழுப்பி அவங்க இதயத்தை நோகடிச்சுராதீங்க!


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வடதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருக்காம் மக்களே: வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

அதிமுக கூட்டணியில் அமமுக.,விற்கு 6 சீட்டா?...உண்மையை உடைத்த டிடிவி தினகரன்

news

அதிமுக எத்தனை இடங்களில் போட்டி? பாஜக., கேட்பது என்ன?...வெளியான சுவாரஸ்ய தகவல்

news

தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும் இந்திய விவசாயிகளுக்கான குரல்: முதல்வர் முக ஸ்டாலின்!

news

அதி நவீன வசதிகளுடன் 20 வால்வோ பேருந்துகள்.. சொகுசாக இனி போகலாம்..!

news

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து.. புளூ பேர்ட் செயற்கைக்கோளுடன்.. விண்ணில் பாய்ந்த எல்.வி.எம்.3-எம்.6

news

ஆரவல்லி மலைத் தொடர்.. இமயமலைக்கே சீனியர்.. கணிமத் திருடர்களிடம் சிக்கி சிதையும் அவலம்!

news

2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில்.. 30% வாக்குகள் கிடைக்கும்.. தவெக சொல்கிறது!

news

டிசம்பர் 28 முதல் 30 வரை...இபிஎஸ் தேர்தல் பிரசாரம்...புதிய விபரம் வெளியீடு

அதிகம் பார்க்கும் செய்திகள்