சென்னை: தமிழ் மொழி வளர்ச்சிக்கான சிறப்பு திட்டங்கள் மற்றும் மதுரையில் உலக தமிழ் ஆராய்ச்சி மையம் கட்டப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 - 2026 ம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக சட்டசபையில் இன்று (மார்ச் 14) தாக்கல் செய்து வருகிறார்.அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் திமுக தலைமையிலான் அரசு 5ஆவது மற்றும் கடைசி நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்து வருகிறது.
இதன்காரணமாக பொதுமக்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டி கட்டாயத்தில் தமிழக அரசு இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இரண்டாவது ஆண்டாக பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.
தமிழ் மொழியின் சிறப்பிக்கும் வகையில், மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கத்தில் அருங்காட்சியகம் அமைப்படும். அத்துடன் மதுரையில் உலக தமிழ் ஆராய்ச்சி மையம் கட்டப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
தமிழுக்கான அறிவிப்பு:
47 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 500 இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ரூ.1.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழம்பெரும் ஓலைச்சுவடிகள், கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்கப்படும். தமிழர்கள் அதிகம் வாழும் பிற இந்தி பெருநகரங்கள், சிங்கப்பூர், கோலாலம்பூர் நகரங்களிலும் தமிழ்ப்புத்தக கண்காட்சி நடத்தப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
உலகத் தமிழ் ஒலிம்பியாட்:
தமிழின் பெருமையை பரப்பிட பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.1 கோடி பரிசுத் தொகையுடன் கூடிய உலகத் தமிழ் ஒலியாட் போட்டி நடத்தப்படும்.
தொல்லியல் துறைக்கான அறிவிப்புகள் !
கீழடி, தெலுங்கனூர், வெள்ளலூர், ஆதிச்சனூர், மணிக்கொல்லை, கரிவலம்வந்தநல்லூர், பட்டணமருதூர், நாகை ஆகிய இடங்களில் தொல்லியல் அகழாய்வு
ஈரோட்டில் ரூ.22 கோடி செலவில் நொய்யல் அருங்காட்சியகம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.21 கோடி செலவில் நாவாய் அருங்காட்சியகம்
எழும்பூர் அருங்காட்சியகத்தில் ரூ.40 கோடியில் ஐம்பொன் மற்றும் செப்புத் திருமேனிகள் காட்சிக் கூடம்
மத்திய அரசு நிதி தராவிட்டாலும் பாதிப்பு இருக்காது
சமக்ரசிக்சா திட்டத்திற்கு மத்திய அரசு நிதி தரவில்லை என்றாலும், தமிழக மாணவர்களின் கல்வியில் ஒரு துளி கூட பாதிப்பு இருக்காது. மும்மொழிக்கொள்கையை ஏற்காததால் மத்திய அரசு ரூ.2,150 கோடியை தமிழ்நாடு அரசுக்கு வழங்கவில்லை. ஆனாலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாநில அரசே அதற்கான நிதி விடுவித்துள்ளது.
திமுகவில் இருப்பவர்கள் சிறைக்கு அஞ்சாத சிங்கங்கள் : அமைச்சர் சேகர்பாபு
தொகுதி மறுசீரமைப்பு விழிப்புணர்வு தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
பிரபல இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ், சைந்தவி தம்பதி.. ஓரே காரில் வந்து பரஸ்பர விவாகரத்து மனு தாக்கல்
பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள..துணைவேந்தர் பணியிடங்களை நிரப்புக.. டாக்டர் ராமதாஸ் கோரிக்கை!
கோயம்பேட்டில் காய்களின் வரத்து அதிகரிப்பு..முருங்கைக்காய் விலை 10 மடங்கு வீழ்ச்சி.. விவசாயிகள் கவலை!
Today gold rate:தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... என்ன காரணம் தெரியுமா?
Mumbai Indians.. என்ன கொடுமை சார் இது.. 13 வருஷமா இப்படியே நடந்திட்டிருந்தா எப்படி சார்!
தல, தல தான்... இளம் வீரர்களை மனம் திறந்து பாராட்டும் தோனி... ரசிகர்களிடம் குவியும் வாழ்த்து
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் மார்ச் 24, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}