- கண்ணகி அண்ணாதுரை
சென்னை: கிறிஸ்துமஸ் வருகிறது, அதைத் தொடர்ந்து புத்தாண்டு வருகிறது.. சொந்த ஊருக்கு செல்ல யாருக்குதான் பிடிக்காது. ஆனால் போவதற்கு போக்குவரத்து வசதி தேவையே.. இதோ தெற்கு ரயில்வே சிறப்பு விழாக்கால ரயில்களை அறிவித்துள்ளது.
போக்குவரத்து நெரிசலை தாண்டி இரயிலை பிடிப்பது ரொம்பவே சவாலான வேலை தான். அதற்கு பயந்தே நம்மில் பல பேர் பயணத்தை ரத்து செய்துவிடுவோம். அந்த கவலை இனி இல்லை. சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளுக்காகவே இந்திய இரயில்வே சிறப்பு இரயில்களை இயக்கவுள்ளது.
இன்று வெளியிடப்பட்டுள்ள தெற்கு ரயில்வேயின் செய்திக் குறிப்பின்படி அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரயில்கள் விவரம்:

1. ரயில் எண். 06012/06011 நாகர்கோவில் - தாம்பரம் - நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில்கள்: ரயில் எண். 06012 நாகர்கோவில் - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில்கள் டிசம்பர் 07, 2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இரவு 23.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.15 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும் (1 சேவை). மறுமார்க்கத்தில், ரயில் எண். 06011 தாம்பரம் - நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில் டிசம்பர் 08, 2025 (திங்கள்) அன்று பிற்பகல் 3.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.15 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். (1 சேவை) ரயில் பெட்டி அமைப்பு: 2- ஏசி இரண்டு அடுக்கு ரயில் பெட்டிகள், 6- ஏசி மூன்று அடுக்கு ரயில் பெட்டிகள், 7- ஸ்லீப்பர் வகுப்பு ரயில் பெட்டிகள், 4- பொது இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டிகள், 1- இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டிகள் (திவ்யங்காஜன நட்பு) & 1- லக்கேஜ் கம் பிரேக் வேன்.
2. ரயில் எண் 06108/06107 திருவனந்தபுரம் வடக்கு சென்னை எழும்பூர் திருவனந்தபுரம் வடக்கு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள்: ரயில் எண் 06108 திருவனந்தபுரம் வடக்கு - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் டிசம்பர் 07, 2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மதியம் 3.45 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.20 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும் (1 சேவை). மறுமார்க்கமாக, ரயில் எண் 06107 சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் வடக்கு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் டிசம்பர் 08, 2025 (திங்கள்) அன்று மதியம் 13.50 மணிக்கு சென்னை எழும்பூரை விட்டு புறப்பட்டு மறுநாள் காலை 08.00 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கை அடைந்து சேரும் (1 சேவை) ரயில் பெட்டி அமைப்பு: 2- ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள், 8- ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள், 8- பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் & 2- இரண்டாம் வகுப்பு பெட்டிகள் (திவ்யங்காஜன நட்பு)
சிறப்பு ரயில்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் மக்களே.
(கண்ணகி அண்ணாதுரை, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
தமிழ்நாடு சட்டசபையில் மீண்டும் ஆளுநர் வெளிநடப்பு.. மைக் ஆப் செய்யப்பட்டதாகவும் பரபரப்பு புகார்!
ஆளுநர் உரையை வாசிக்காமல் முரண்டு பிடிப்பது நல்லதல்ல.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி.வெளியேறியது ஏன்?.. ஆளுநர் மாளிகை விளக்கம்
ஜனநாயகன் சென்சார் சான்றிதழ் வழக்கில் உத்தரவு ஒத்திவைப்பு
பொறுப்பேற்றதும் திருப்பரங்குன்றம் விவகாரம் பற்றி பேசிய பாஜக நிதின் நபின்
சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த விடியா திமுக அரசு... எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்!
கவர்னரின் மைக் ஆஃப் செய்யப்படவில்லை...சபாநாயகர் அப்பாவு விளக்கம்
அம்பானி வீட்டு மின்சார கட்டணம் எவ்வளவு தெரியுமா? கேட்ட நீங்களே ஆசந்து போவீங்க!
யாருடன் கூட்டணி?...டிடிவி தினகரன் நாளை கட்சியினருடன் ஆலோசனை
{{comments.comment}}