அகங்காரம் என்பது..!

Sep 02, 2025,12:21 PM IST

- மைத்ரேயி நிரஞ்சனா


வாழ்க்கையில் எல்லா துன்பங்களுக்கும் காரணம் அகங்காரம்! நமது உண்மையான குணம் என்பது அன்பு மகிழ்ச்சி கருணை பரவசம்.. அல்லது ஒன்றுமே இல்லாத தன்மை..


இதை மொத்தமாக மறைப்பது அகங்காரம் மட்டுமே! அகங்காரம் என்பது என்ன என்று யோசித்ததுண்டா? 


ஒரு நிமிடம் எடுத்து கொஞ்சம் யோசித்து உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? பொதுவாக திமிராக இருப்பவர்களை அகங்காரம் உள்ளவர்கள் என்று சொல்வோம்..! அது அப்படித்தானா என்று கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்போமா? 


நான் என்பது என்ன? இது எப்படி வந்தது? நான் என்பது இந்த உடலா? பேசும்போது ஒரு அடையாளத்திற்காக நான் இந்த உடலாக பாவித்து பேசுகிறோம்.. வேறு வழி இல்லை.. ஆனால் அதைத் தாண்டி நான் என்ற அடையாளத்திற்கு பின்னால் என்னென்ன இருக்கிறது..




இந்த நான் என்பது சமுதாயத்தால் நமக்கு கொடுக்கப்பட்டது.. இதை காத்துக் கொள்ள.. நம்முடைய உண்மையான தன்மையை முழுவதுமாக விட்டுக் கொடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.. சமுதாயம் என்பது நமது பெற்றோர், நண்பர்கள் ஆசிரியர்கள்.. இன்று அனைத்து உறவுமுறைகளையும் நாம் கூற முடியும்.. இந்த நான் என்பதற்கு பின்னால் நம்முடைய அனுபவங்கள்.. பிறரை பற்றிய கருத்துக்கள்.. நம்மைப் பற்றிய பிறரின் கருத்துக்கள்.. நம்முடைய பழக்க வழக்கங்கள், கலாச்சாரம் இப்படி எல்லாவற்றையும் இந்த நான் உள்ளடக்கி உள்ளது.. அத்துடன்.. நம்முடையது என்று பிடித்து வைத்துக் கொண்டுள்ள எல்லாமும் இதில் அடங்கும்..


இது வெறும் பிம்பம் மட்டுமே இன்றி உண்மையல்ல என்று சிறுது ஆராய்ந்தாலே நாம் புரிந்து கொள்ள முடியும்.. அதையும் தவிர.. இது மாறிக்கொண்டே இருக்கும் தன்மை கொண்டு இருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.. எது ஒன்று மாறிக்கொண்டே இருக்கிறதோ அது எப்படி நாமாக இருக்க முடியும்? ஒரு உவமானம் சொல்ல வேண்டும் என்றால்.. வானம் இருக்கிறது அதை மறைக்கும் விதமாக மேகங்கள் ஓடிக்கொண்டே இருக்கிறது.. ஓடிக்கொண்டே இருக்கும் மேகங்களை.. இந்த நான் என்ற பிம்பத்திற்கு ஒப்பிட முடியும்.. வானம் ஒன்று மற்றும் நிலையானது .. இல்லையா?  இதனால் நமக்கு துன்பமே அன்றி.. வேறு எந்த பயனும் இல்லை என்று உணரும் போது.. ஒரு பெரிய மாற்றம் நமக்குள்ளே நடக்கும்..


ஆனாலும் அந்த நான் என்ற பிம்பத்தை விடுவது அவ்வளவு எளிதாக இல்லை.. ஏனெனில் நாம் ஒன்றுமே இல்லாத தன்மை என்ற உண்மை.. நமக்கு பெரும் பயத்தை அளிக்கிறது..


ஒரு சிறிய கதையை பார்க்கலாம்..


அந்த காலத்தில்.. சக்கரவர்த்தி என்பவர் பெரிய பெரிய ராஜ்யங்களை வெற்றி கண்டவர்.. இப்படி ஒரு சக்கரவர்த்தியாக காஷ்முஷ் இருந்தார்..ஒரு சக்கரவர்த்தி என்பவர் மிக அரிதாக வருவதுண்டு.. ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை..


பல ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகு.. அவர் இறந்து போனார்.. என்ன எடுத்துக் கொண்டு போனார்? ஒன்றுமே இல்லை..

அவர் இறந்த பிறகு அவர் மீது பேரன்பு கொண்டிருந்த.. அவரது மனைவியர் சிலரும் மந்திரிமார்களும்.. தற்கொலை செய்து கொண்டு இறந்தனர்..


அப்படிப்பட்ட சக்கரவர்த்தி இறக்கும்போது சொர்க்கத்தில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும்.. அங்கு சுமேறு என்று தங்கத்தாலும் வைடூரியத்தாலும் ஏற்படுத்தப்பட்ட பெரிய மலை இருப்பதாக சொல்லப்படுகிறது. அது இமாலய மலையை விட 100 மடங்கு பெரியது.. அப்படி ஒரு மலையில் அந்த சக்கரவர்த்தி தன்னுடைய பெயரை பொறிக்கலாம்..


காஷ்முஷ் தன்னுடைய பெயரை அதில் பொறிக்க வேண்டும் என்று மிக ஆவலாக இருந்தபோது அங்கிருந்த காவலாளி அவரிடம் நீங்கள் முதலில் தனியாக செல்லுங்கள் உங்கள் படையுடன் செல்ல வேண்டாம்.. என்று கூற.. காஷ்முஷ் க்கு இது புரியவில்லை.. பார்ப்பதற்கு யாரும் இல்லை என்றால் பெயர் பொறித்து என்ன பயன் என்று நினைக்க காவலாளி சொல்கிறார்.. நீங்கள் முதலில் சென்று பெயரை பொறித்து விட்டு பிறகு வேண்டுமானால் உங்கள் மக்களை அழைத்துச் செல்லுங்கள். 


காஷ்முஷ் அவ்வாறே சென்று பார்க்கும் போது.. அந்த மலையில் இவர் பெயரை பொறிக்க சிறிது கூட இடமில்லை.. அவர் என்னவோ தன் பெயர் தான் அதில் இடம்பெறப் போகிறது என்று நினைத்திருக்க.. அந்த மலையில் இடம் இல்லாத அளவிற்கு அத்தனை பெயர்கள்.. அவருக்கு மிகவும் ஏமாற்றம் ஆகிவிட்டது.. 


திரும்ப சென்று காவலாளியை தனியே அழைத்து நிலைமையை கூற.. காவலாளி சொல்கிறார்.. ஏதாவது ஒரு பெயரை அழித்துவிட்டு உங்கள் பெயரை எழுதிக் கொள்ளுங்கள்.. இப்போது காஷ்முஷ் அதில் தனக்கு விருப்பம் இல்லை என்று கூற.. காவலாளியும் இதுபோல பல சக்கரவர்த்திகள் தங்கள் பெயரை பொறிக்காமல் விட்டுவிட்டனர்.. என்று கூறுகிறார்..


இந்தப் பிரபஞ்சம் எவ்வளவு பெரியது.. எவ்வளவு மனிதர்கள் வாழ்ந்து சென்றிருக்கிறார்கள்.. நாம் இந்த நான் என்பதற்குப் பின்னால் என்னென்ன சேர்த்து வைத்து உள்ளோமோ அதையெல்லாம் விட்டுவிட்டு தான் சொல்ல வேண்டும்.. வாழ்க்கையில் அவ்வளவு துன்பத்திற்கும் காரணமான அந்த பிம்பம் இல்லாமல் வாழ்ந்தால் எப்படி இருக்கும்.. ? வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும்.. எதையும் எனது என்று பிடித்து வைத்துக் கொள்ளாத தன்மை நம்மை இந்த நொடியில் மகிழ்ச்சியுடன் வாழ உதவும்..


நாம் தொடர்வோம்..


மைத்ரேயி நிரஞ்சனா.. எழுத்தாளர், பேச்சாளர், பாடகி என பன்முகத் திறமையாளராக வலம் வருகிறார். இல்லத்தரசி என்ற நிலையிலும் சிறந்து விளங்குபவர். மதுரையில் பிறந்தவர், சேலத்தில் வசிப்பவர். அடிப்படையில் ஒரு பொறியாளர். கடந்த 15 வருடமாக ஆன்மீகம் மற்றும் தியானத்தில் அதிக ஈடுபாடு. ஒரே மனித குலம் அமைய வேண்டும் என்ற கனவுடன் வலம் வருபவர்.  ஆன்மிகம் மட்டுமே மனிதகுலத்தை பயமற்ற, போட்டியில்லாத புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும், அங்கு பணம் மற்றும் போட்டிக்குப் பதிலாக அன்பு மட்டுமே அடிப்படையாக இருக்கும். பொறுப்புடன் கூடிய சுதந்திரமே புதிய மதமாக இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

GST reforms: புதிய ஜிஎஸ்டி.,யால் எவை எவை விலை குறையும்.. எது உயரும்.. பொருட்களின் முழு விபரம் !

news

ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கம்.. ஜிஎஸ்டியில் முக்கிய மாற்றம்.. புதிய வரிகள் செப்.,22 முதல் அமல்

news

படத்தில் வில்லன்...நிஜத்தில் ஹீரோ...வெள்ளம் பாதித்த மக்களுக்காக ஓடி வந்த சோனு சூட்

news

வெனிசுலா விவகாரம்...டிரம்ப்க்கு அமெரிக்க கோர்ட் கொடுத்த அடுத்த குட்டு

news

அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்: ஏ.ஆர். ரகுமான்

news

மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை.. மழைநீரும் வடிந்த பாடில்லை.. எடப்பாடி பழனிச்சாமி

news

உட்கட்சி பூசல்களை சரி செய்க...தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை

news

விராட் கோலிக்கு லண்டனில் உடல் தகுதி தேர்வு நடத்த அனுமதி

news

பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்