கொழும்பு: இலங்கையில் ஒன்பதாவது அதிபராக அனுரா குமார திசநாயக்கே இன்று பதவியேற்றார். நூற்றாண்டு கனவு நனவாகியுள்ளதாக கூறியுள்ள அவர், சிங்களர்களும், தமிழர்களும், முஸ்லீம்களும் அனைவரும் இணைந்து இந்த நாட்டை வளப்படுத்துவோம் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இது ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் ஆகும். இதில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, தேசிய மக்கள் கட்சி தலைவர் அனுரா குமாரா திசநாயக்கே உட்பட 38 பேர் போட்டியிட்டனர்.
தேர்தல் முடிந்த உடனேயே முதல் விருப்ப வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் வாக்குகள் எண்ணப்பட்டு வந்த நிலையில் இரண்டாவது விருப்ப வாக்கு எண்ணிக்கையின்போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவைவிட 12 லட்சத்து 9 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று திசநாயக்கே வெற்றி பெற்றார். இடதுசாரி தலைவர் ஒருவர் ஜனாதிபதியாக வெற்றி பெறுவது இலங்கை வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
இந்த நிலையில் கொழும்பில் உள்ள அதிபர் செயலகத்தில் இலங்கையின் ஜனாதிபதியாக இன்று பதவியேற்றார் அனுரா குமாரா திசநாயக்கே. இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூர்ய, அனுரா குமாராவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அரசியல் பிண்ணனி இல்லாத விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர் அனுரா குமாரா திசாநாயக்கே. இவர் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் கொழும்பு மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டார். 2014 முதல் மக்கள் விடுதலை முன்னணியின் கட்சித் தலைவராகவும், 2019 முதல் தேசிய மக்கள் சக்தியின் தலைவராகவும் செயல்பட்டார்.
தமிழர்களும், சிங்களர்களும் இணைந்து பாடுபடுவோம்
ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அனுரா குமாரா வெளியிட்ட அறிக்கையில், நூற்றாண்டுக் கனவு நனவாகியுள்ளது. இது ஒரு தனி மனிதரின் வெற்றி அல்ல. மாறாக லட்சக்கணக்கான மக்களின் வெற்றி. உங்களது உறுதிதான் இந்த அளவுக்கு கொண்டு வந்துள்ளது. இதற்காக உங்களுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளேன். இந்த வெற்றி நமது அனைவருக்கும் சொந்தமானது.
மக்களின் தியாகத்தாலும், வியர்வையாலும், பல உயிரிழப்புகளாலும் இந்த பயணம் தொடர்ந்துள்ளது. இந்த தியாகங்கள் மறக்கப்படாது. உங்களது நம்பிக்கையும், போராட்டமும் கவனத்தில் கொள்ளப்படும். கோடிக்கணக்கான மக்களின் கண்களில் துளிர்த்துள்ள நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் என்னை மிகவும் பொறுப்புடன் செயல்பட வைக்கும். அனைவரும் இணைந்து இலங்கையின் புதிய வரலாற்றை எழுதுவோம்.
புதிய தொடக்கமாக இது அமையும். சிங்களர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் மற்றும் இலங்கையின் அனைத்து மக்களும் இணைந்து இந்த கட்டமைப்பை உருவாக்குவோம் என்றார் அவர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
களை கட்டியது தவெக மாநில மாநாடு... சாலை மார்க்கமாக மதுரை வந்தடைந்தார் விஜய்!
பாஜக தேர்வு செய்த வேட்பாளர் தமிழர் என்பதாலேயே ஆதரிக்க முடியுமா?: திமுக எம்பி கனிமொழி!
சபாஷ் செம போட்டி.. துணை ஜனாதிபதி தேர்தலில்.. ஆப்பை அப்படியே பாஜக பக்கம் திருப்பி விட்ட காங்.!
ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் கூட்டத்தை போட்டுவிட்டு ஓட்டுனரை மிரட்டுவதா?: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
உப்பு அதிகம் சாப்பிட்டால் கிட்னி பாதிக்கப்படுமா.. மருத்துவர்கள் சொல்வது என்ன?
அன்புமணி பதிலளிக்க தவறினால் என்ன நடக்கும்?.. டாக்டர் ராமதாஸின் அடுத்தடுத்த அதிரடி!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்சன் ரெட்டி தேர்வு!
சிறுநீரகக் கொள்ளை தீரும் முன்பே கல்லீரல் திருட்டு.. இது தான் திமுகவின் சாதனையா?: டாக்டர் அன்புமணி
மும்பையை உலுக்கி எடுத்த கன மழை.. நவி மும்பையின் பல பகுதிகளில் வெள்ளக்காடு!
{{comments.comment}}