சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!

Dec 13, 2025,03:00 PM IST

சென்னை: சென்னையில் பிரபல டிவி நடிகை ராஜேஸ்வரி (39) தேடிக் கொண்ட விபரீத முடிவு மீண்டும் ஒரு விவாதத்திற்கு உயிர் கொடுத்துள்ளது. மன அழுத்தத்தால் அவர் தனது முடிவைத் தேடிக் கொண்டுள்ளதால், திரைத் துறையினர், சின்னத் திரைக் கலைஞர்களிடையே நிலவும் இந்தப் பிரச்சினைக்கு உரிய நிவாரணம் தேட வேண்டியதன் அவசியத்தை இது மேலும் வலுவாக்கியுள்ளது.


முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி, 'பாக்யலட்சுமி', 'சிறகடிக்க ஆசை' போன்ற பல தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்ததன் மூலம் அறியப்பட்டவர். இவர் தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். தனது முடிவை இவரே தேடிக் கொண்டது தெரிய வந்தது.


முதற்கட்ட விசாரணையில், நடிகை தனது கணவருடன் குடும்பப் பிரச்சனைகளைச் சந்தித்து வந்ததாகத் தெரியவந்துள்ளது. சமீபத்திய தகராறுக்குப் பிறகு, அவர் சைதாப்பேட்டையில் உள்ள தனது தாயின் வீட்டிற்குச் சென்றார்.




தினசரி படப்பிடிப்புக்குச் சென்றாலும், பிரிவின் காரணமாக ராஜேஸ்வரி கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. வியாழக்கிழமை, சைதாப்பேட்டை வீட்டில் தனியாக இருந்தபோது, அவர் உயிரைப் போக்கிக் கொண்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.


அவரது பெற்றோர்தான் அவரை மயக்க நிலையில் கண்டனர். முதலில் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலைமை மோசமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.


தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தபோதிலும், வெள்ளிக்கிழமை ராஜேஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சைதாப்பேட்டை போலீஸார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திரைத்துறையினர், சின்னத்திரைத் துறையினர் சந்தித்து வரும் மன அழுத்தத்தால் பலர் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இப்படிப்பட்ட பிரச்சினை உள்ளவர்களுக்கு உரிய கவுன்சில் கொடுக்க இந்தத் துறையினர் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.


எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு. தீர்க்க முடியாத பிரச்சினை என்று எதுவுமே கிடையாது. ஏதாவது மன அழுத்தமோ, கவலையே ஏற்பட்டால் உரியவர்களுடன் பேசி நல்ல ஆலோசனையைப் பெறுங்கள். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!

news

பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!

news

வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

news

ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!

news

தங்கம் விலையில் இன்று மாற்றமில்லை... வெள்ளியின் விலையும் சற்று குறைவு தான்!

news

Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!

news

டெல்லியிலும், சுற்று வட்டாரத்திலும்.. விடிஞ்சு வந்து பார்த்தா.. ஒரே smog.. இயல்பு நிலை பாதிப்பு

news

சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!

news

பாரதீதீ..!

அதிகம் பார்க்கும் செய்திகள்