கலகலப்பு படத்தில் இடம் பெற்ற.. பேய் என்ற கேரக்டரில் நடித்த.. நடிகர் கோதண்டராமன் மறைவு!

Dec 19, 2024,05:21 PM IST

சென்னை: பிரபல ஸ்டண்ட் மாஸ்டரும், காமெடி நடிகருமான கோதண்டராமன்(65) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.


சிறுவயதிலிருந்த கராத்தே போன்ற கலைகளில் சிறந்து விளங்கியவர் கோதண்டராமன். ஸ்டண்ட் யூனியனில் சேர்ந்து சண்டைக் கலைஞராக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். கடந்த 25 வருடமாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் கலைஞராக, மாஸ்டராக பணிபுரிந்து வந்தார் கோதண்டராமன். 


எல்லாமே என் ராசாதான், ஒன்ஸ்மோர், எல்லாமே என் பொண்டாட்டி தான் போன்ற முக்கிய நட்சத்திரங்களின் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்துள்ளார். அதன் பின்னர் சிறு சிறு வேடங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். குறிப்பாக காமெடி காட்சிகளில் நடிக்க ஆரம்பித்தார். 




கடந்த 2015 ஆம் ஆண்டு சுந்தர் சி  இயக்கத்தில் வெளியான கலகலப்பு திரைப்படத்தில் சந்தானம் கூட்டணியில் காமெடி காட்சிகளில் நடித்து பிரபலமானவர். இவர் இயற்கையாகவே உடல் பருமனாக காணப்படுவதால் பேய் என்ற கதாபாத்திரத்தில் காமெடி செய்து நடித்திருந்தது பல்வேறு தரப்பினரிடமும் வரவேற்பு பெற்றது. சந்தானத்துடன் படம் முழுக்க வரும் கேரக்டர் இது. இதுதவிர வேறு பல படங்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தார் கோதண்டராமன்


சென்னை பெரம்பூரில் வசித்து வந்த கோதண்டராமன் கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இன்று அவரது இல்லத்தில் அவர் காலமானார். இவருடைய மறைவுக்கு திரை நட்சத்திரங்கள், ஸ்டண்ட் கலைஞர்கள், ரசிகர்கள் என பலரும் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!

news

இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!

news

கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்

news

வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!

news

தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!

news

SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

news

3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி

news

ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு

news

காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்