சென்னை : சர்தார் 2 படத்தின் சண்டைக்காட்சிகள் பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்று வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட விபத்தில் சண்டை பயிற்சியாளர் ஏழுமலை என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. படக்குழுவினர் மிகுந்த மன வேதனை அடைந்தனர்.
ப்ரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பு பெற்றது. இது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில், கார்த்தி இப்படத்தில் அப்பா மகன் என்ற இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இவருடன் ரிஷி கண்ணா, லைலா, முனிஷ்காந்த் மற்றும் பலர் நடித்திருந்தனர். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாகம் தயாரிக்கப்படும் என ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அதன்படி, யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகும் சர்தார் 2 திரைப்படம் கடந்த வாரம் ஜூலை 12ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது. மேலும் இப்படத்தில் கார்த்தியுடன், எஸ் ஜே சூர்யாவும் இணைந்து நடிக்கவுள்ளார்.
இப்படத்தின் சண்டைக் காட்சிகள் சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டு வந்தது. அப்போது ஸ்டண்ட் பயிற்சியாளர் ஏழுமலை என்பவர் சண்டை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். சண்டை பயிற்சியின் எவ்வித தற்காப்பும் இல்லாமல் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென 20 அடி உயரத்திலிருந்து கீழே தவறி விழுந்தார்.
கீழே விழுந்ததில் பலத்த அடிபட்டு ஏழுமலை உயிருக்குப் போராடினார். அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் உடனடியாக அவரை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் ஏழுமலை பரிதாபாக உயிரிழந்தார். மேலிருந்து கீழே விழுந்ததில் மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு நுரையீரலில் ரத்தம் கசிந்து அவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
விருகம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவின் 15 நகரங்களை தாக்க முயற்சித்த பாகிஸ்தான்.. அதிரடியாக முறியடித்த ராணுவம்!
அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து கனிமவளத் துறை பறிக்கப்பட இது தான் காரணமா?
Rain forecast: தமிழ்நாடு முழுவதும்.. அடுத்த சில நாட்களுக்கு மழை இருக்கு.. என்ஜாய்!
ஜெயிலர் 2: ரஜினிகாந்துடன் மோகன்லால் மீண்டும் இணைவாரா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
வெளுக்குது வெயிலு.. ஏசி யூஸ் பண்றீங்களா.. அப்ப இதையெல்லாம் மறக்காம பாலோ பண்ணுங்க!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக.. ரோஹித் ஷர்மா திடீரென ஓய்வை அறிவித்தது ஏன்?
உங்களுக்கு bp இருக்கா?.. தயவு செய்து இந்த 5 உணவுகளை மறந்தும் எடுத்துக்காதீங்க!
ரெட்ரோ ரூ.100 கோடி வசூல்.. சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணிக்கு..அமோக வரவேற்பு..!
கதையல்ல நிஜம்.. வளர்ப்புத் தாயும், சைக்கிளும்!