சென்னை: சென்னையில் இன்று மின்சார ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மிச்சாங் (மிக்ஜாம்) புயல் பாதிப்பு காரணமாக இன்று ரயில்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Michaung புயல் சென்னையிலும், புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. புயல் காரணமாக கொட்டிய கன மழையால் தலைநகரின் 90 சதவீத பகுதிகள் வெள்ளக்காடாகி விட்டன. தேங்கிய வெள்ளம் இப்போதுதான் படிப்படியாக வடிந்து வருகிறது.

முக்கியச் சாலைகளில் ஓரளவு வெள்ளம் வடிந்து விட்டது. பிற பகுதிகளிலும் வெள்ளம் வடிந்து வருகிறது. மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறையினர் இந்தப் பணிகளில் முழு வீச்சில் ஈடுட்டுள்ளனர். இதே நிலையில்தான் புறநகர்களும் உள்ளன. தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளிலும் தீவிரமான வெள்ள மீட்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

சென்னை அருகே புயல் நிலை கொண்டிருந்த நேற்று மின்சார ரயில் சேவை முழுமையாக ரத்து செய்ப்பட்டது. பல இடங்களில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி இருந்தது. சில இடங்களில் மரங்கள் விழுந்து ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பும் ஏற்பட்டது . பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரயில் சேவையின் பாதுகாப்பை கடத்தில் கொண்டு நேற்று முழுமையாக பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது.
இன்றும் அதே போல முழுமையாக சென்னை பீச் டு தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேளச்சேரி உள்ளிட்ட அனைத்து மார்க்கங்களிலும் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனவே பயணிகள் இன்று ரயில் பயணங்களை மேற்கொள்ள இயலாது. மீட்பு பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு ரயில் சேவை மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மூத்த தலைவர்களைத் தேடிச் சென்று சந்திக்கும் விஜய்.. தமிழகத்தில் உருவாகும் புதிய அரசியல் டிரெண்ட்
JCD Prabhakar: தமிழகத்தின் புதிய சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் தேர்வு.. துணை சபாநாயகரானார் விஜய் சங்கர்
தமிழ்நாட்டின் 17-ஆவது சட்டசபை கூடியது.. உளமார உறுதிமொழி எடுத்த முதல்வர் விஜய்
N Anand: புஸ்ஸி ஆனந்த்.. இதுவரை வென்றது 2 முறை.. இரண்டு முறையும் வென்றது யாரைத் தெரியுமா?
'உளமாற உறுதி ஏற்கிறேன்' இந்த சொல்லின் வரலாறு தெரியுமா?
சிந்தனைச் சிதறல்.. ஆணவம் அறிய விடாமல் நம்மைக் கெடுக்கும்
Proverb: தாயைப் பார்த்து பெண்ணை கொள், பாலை பார்த்து பசுவைக் கொள்!
ஆசையில பாத்திகட்டி!
நிதானம்
{{comments.comment}}