சென்னை: கடுமையான வயிற்று வலி காரணமாக நடிகர் ரஜினிகாந்த் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பயப்படும்படி எதுவும் இல்லை என்று அவரது மனைவி லதா ரஜினிகாந்த் விளக்கியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படம் தயாராக உள்ளது. இந்த மாதம் வேட்டையன் திரைக்கு வரவுள்ளது. இதற்கான முஸ்தீபுகளில் படக் குழு தீவிரமாக உள்ளது. இப்படத்தின் மனசிலாயோ பாடலும் கூட வெளியாகி வைரலானது. சமீபத்தில் இதன் ஆடியோ வெளியீட்டு விழாவும் கூட கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிலையில் ரஜினிகாந்த்துக்கு நேற்று நள்ளிரவுக்கு மேல் திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. கடுமையான வலியால் அவதிப்பட்ட அவர் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
இதுகுறித்து ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்ததிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோது, கவலைப்படும்படி, பயப்படும்படி எதுவும் இல்லை என்று அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, ரஜினிகாந்த்துக்கு இன்று பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருதயவியல் நிபுணர் டாக்டர் சாய் சதீஷ் இன்று ரஜினிக்கு பரிசோதனைகளை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது ரசிகர்கள் கவலை அடைந்தனர். விரைவில் அவர் குணம் பெற வேண்டும் என்று பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நிசமான பொங்கல்!
ஜனநாயகன் வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றத்தையே அணுக உச்சநீதிமன்றம் உத்தரவு
உழவின் மகுடம் - தைப்பொங்கல்!
பொங்கலோ பொங்கல் என்றுரத்துக் கூவிட.. கிண்டிடக் கிண்டிடக்.. குலவையிட்டு!
மங்கலத் தை மலர்ந்த நாள் பொங்கல் வைத்து எங்கும் இன்பம்!
பொங்கலோ பொங்கல்.. a day of thanking the Sun God bright
பெரும் பொங்கல்!
தைப்பொங்கல்!.. தரணி போற்றும் திருநாள்!
தை மாதம் பிறந்தது பொங்கலோ பொங்கல் .. பொங்கலோ பொங்கல் !
{{comments.comment}}