பிராமணர்களின் கோரிக்கையை நிறைவேற்றினால்.. திமுகவுக்காக பிரச்சாரம் செய்வேன்.. எஸ்.வி.சேகர் அதிரடி

Nov 08, 2024,05:55 PM IST

சென்னை: அந்தணர் நல வாரியம் உள்ளிட்ட பிராமணர் சமுதாயத்தின் கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்றினால், திமுகவுக்கு ஆதரவாக வருகிற தேர்தலில் நான் பிரச்சாரம் செய்வேன் என்று நடிகர் எஸ்.வி.சேகர் அதிரடியாக கூறியுள்ளார்.


நடிகர் எஸ்.வி.சேகர் இன்று தலைமைச் செயலகத்திற்கு வந்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனை சந்தித்து டப்பிங் யூனியனில் நடிகர் ராதாரவி முறைகேடாக நடந்து வருவது குறித்து புகார் மனு அளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது அவரிடம் அரசியல் தொடர்பாகவும் பல கேள்விகள் கேட்கப்பட்டன. எஸ்.வி.சேகரின் பேட்டியிலிருந்து சில துளிகள்:




நான் இப்போது எந்தக் கட்சியிலும் இல்லை. ஆரம்பத்தில் அதிமுகவில் செயல்பட்டேன். ஜெயலலிதாதான் அழைத்தார். பிறகு அவரே அனுப்பி விட்டார். இருந்தாலும் அவரது புகைப்படம் எனது வீட்டில் உள்ளது. பிறகு ராகுல் காந்தி அழைத்தார். பிறகு அங்கும் இல்லை. என்னுடைய தந்தை போல என் மீது அன்பு செலுத்தியவர் கலைஞர். தனது நெஞ்சுக்கு நீதி நூலில் எனக்கும் ஒரு இடம் கொடுத்தார். அதை விட வேறு என்ன வேண்டும் எனக்கு.


திமுகவுக்காக திமுகவுக்காக பிரச்சாரம் செய்யத் தயார்:


பாஜகவில் சேருமாறு பிரதமர் மோடி அழைத்தார். இதனால்தான் நான் சேர்ந்தேன். ஆனால் கடந்த 10 வருடமாக என்னை பயன்படுத்திக் கொள்ளவே இல்லை. ஜாடியில் போட்ட பூதம் போல ஏன் சும்மா இருக்க வேண்டும். ஒன்று பயன்படுத்தணும். ஆனால் நான் தேவையில்லை என்று அவங்களே சொல்றாங்க. மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம். எனவேதான் வந்து விட்டேன். எனது உறுப்பினர் அட்டையைக் கூட நான் புதுப்பிக்கவில்லை.


மீண்டும் மோடி அழைத்தால் பார்க்கலாம். இப்போது என் முகத்தில் எந்த சாயமும் இல்லை. நான் இந்தியன், தமிழன், திராவிடன். பிராமணர்களுக்கு நல்லது செய்தால் நான் வருகிற தேர்தலில் திமுகவுக்காக பிரச்சாரம் செய்வேன். அதில் என்ன தப்பு இருக்கு. அந்தணர் நல வாரியம் அமைக்க வேண்டும், பிராமணர்கள் அதிகமாக உள்ள நாலு தொகுதிகளில் அவர்களுக்கு சீட் வழங்க வேண்டும், பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளோருக்கு இட ஒதுக்கீட வழங்க வேண்டும். எல்லோருக்குமான முதல்வராக தன்னை கூறும் முதல்வர் இதை நிச்சயம் செய்வார் என்று நான்  நம்புகிறேன். இதைச் செய்வதால் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதைச் செய்தால் நிச்சயம் நான் திமுகவுக்காக பிரச்சாரம் செய்வேன். அதேசமயம் இப்போது நான் எந்தக் கட்சியிலும் சேரும் யோசனையே இல்லை.


பாஜகவில் 99 பிராமணர்கள்தான் உள்ளனர்




பாஜகவில் 99 சதவீதம் கிடையாது, 99 பிராமணர்கள்தான் உள்ளனர். நம்ம கட்சிக்கு நீ தேவையே இல்லை என்று அண்ணாமலை சொல்லும்போது நீ ஏன் போய் வெட்கமே இல்லாமல் அங்கே நிக்கிறே. சமூகத்திற்கு எந்த உதவியையும் செய்யாத கட்சிக்கு நாம் ஏன் உழைக்க வேண்டும். கட்சிக்குத்தான் ஓட்டு தேவை. நமக்கு தேவையில்லை. இதுவரை அண்ணாமலை எத்தனை அறிவிப்புகளை வெளியிட்டார். எதையாவது செய்தாரா.


கோவையில் குண்டு வெடிப்பு நடந்தபோது 60 இடத்தில் மீட்டிங் நடக்கும் என்றார்.. நடந்துச்சா இல்லையே. தமிழ்நாட்டில் 10,000 இடத்தில் கொடி அமைப்போம் என்றார். அதுவும் நடக்கலை. இப்படி வாயைத் திறந்தாலே பொய். உன்னை மாதிரியே தமிழ்நாடு மக்கள் அப்பாவிகளா என்ன!


பிராமணர்கள் மட்டுமல்ல எல்லோருக்குமே பாஜக வீண். சராசரி மக்களுக்குண்டானதை செய்ய வேண்டும். திமுக அரசு அதை நேர்த்தியாக செய்கிறது. மகளிருக்கு இலவச பஸ் விடுகிறார்கள். பெண்களுக்கு உரிமைத் தொகை தருகிறார்கள். அதைப் பார்த்து மோடி அவர்களே அறிவிக்கிறார். இப்படி இருக்கும்போது இங்குள்ளவர்களை விமர்சிப்பது சரியான செயல் அல்ல. எத்தனை திட்டங்களை இங்கு முழுமையாக செய்கிறார்கள். எனவே திமுக கூட்டணிக்கு ஒன்றரை கோடி வாக்குகள் சாலிடாக வரும்.  


முதல்வரே  நேரில் போய் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். கடந்த சட்டசபைத் தேர்தலில் ஒரு இடம் விடாமல் சுற்றியதன் விளைவுதான் இந்த வெற்றி. நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி 40 தொகுதிகளில் திமுக வென்றது. அவர்களாகவே ஓட்டுப் போட்டார்களா. தமிழ்நாட்டில் தேர்தல் என்றால் அது திமுக - அதிமுக இடையேதான்.


விஜய்யைப் பொறுத்திருந்து பார்ப்போம்:




விஜய் எல்லாருக்கும் எல்லாம் என்கிறார். அப்படீன்னா அவரோட கேரவனுக்குள் எல்லோரையும் விடுவாரா. விஜய் வந்திருக்கிறார். வந்தவுடன் விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை. படத்துக்கு 200 கோடி வாங்குபவர் வந்துள்ளார். என்ன நல்லது செய்யப் போகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள 500 நாட்கள் இருக்கின்றன. தேர்தல் வரைக்கும் அத்தனை கிராமங்களையும் சுற்றுப்பயணம் செய்து தனது முகத்தைக் காட்டி நேருக்கு நேர் பேச வேண்டும்.


எம்ஜிஆர் கோடம்பாக்கத்திலிருந்து நேரடியாக முதல்வராகவில்லை, திமுகவில் சேர்ந்து பிரச்சாரம் செய்துதான் கட்சியை ஆரம்பித்தார். எனவே விஜய்யை மைனஸாகவும் சொல்ல மாட்டேன். பிளஸ்ஸாகவும் சொல்ல மாட்டேன். கூட்டம் வரும். அதை ஓட்டாக மாற்ற வேண்டிய அவசியமும், சூழ்நிலையும் திறமையும் விஜய்க்கு இருக்க வேண்டும். இருந்தால் நல்லது. 


நான் எம்எல்ஏவாக இரு்நதபோது அரசியல்வாதிகளால் லஞ்சம் வாங்காமல் இருக்க முடியாது என்றார்கள். ஆனால் நான் எம்எல்ஏவாக இருந்தபோது, ரூ. 90 கோடி அளவுக்கு வேலை செய்துள்ளேன். ஒரு காசு கூட நான் லஞ்சம் வாங்கவில்லை.  அதுபோதும் எனக்கு.  வருகிற 30ம் தேதி எனது மேடை நாடகக் குழுவின் 50வது ஆண்டு. இதை 7000மாவது நாடக விழாவாகக் கொண்டாடுகிறோம். எனது தந்தை எஸ்.வி.வெங்கட்ராமனின் நூறாவது ஆண்டு. அதில் முதல்வர், துணை முதல்வர் தலைமையில் கொண்டாடத் திட்டமிட்டுள்ளோம். நேரம் கேட்டுள்ளோம் என்றார் எஸ்.வி.சேகர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

IMD alert: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு.. அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்கும்.. அதி கன மழைக்கு வாய்ப்பு

news

திருவண்ணாமலை.. தீப மலையின் உச்சியை அடைந்தது தீபம் ஏற்றும் ராட்சத கொப்பரை!

news

3 மாவட்டங்களில் இன்று அதிகன மழைக்கான ரெட் அலர்ட்.. நாளை தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

news

Yearender 2024: அஜீத்தால் பிரபலமடைந்த அஜர்பைஜான்.. அதிகம் கூகுள் செய்யப்பட்ட நாடு இதுதான்!

news

Yearender 2024: நாக்கில் வச்சதும்.. நச்சுன்னு சுவைக்கும் மாங்காய் ஊறுகாய்க்கு.. தேடுதலில் 2வது இடம்!

news

கார்த்திகை தீபத் திருநாள் ஸ்பெஷல் நைவேத்தியம்...கார்த்திகை பொரி பற்றி இதெல்லாம் தெரியுமா?

news

ஆங்கில புத்தாண்டு 2025 ராசிபலன் : மேஷம் ராசி வாசகர்களே.. இந்த வருஷம் உங்க வருஷம்.. ஜமாய்ங்க!

news

திருக்கார்த்திகை தீபத் திருநாள் 2024: எந்த நேரத்தில், எப்படி விளக்கேற்ற வேண்டும்?

news

Yearender 2024: இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட.. நபர்கள், விளையாட்டுகள்.. இதோ லிஸ்ட்!

அதிகம் பார்க்கும் செய்திகள்