சென்னை: நடிகை சம்யுக்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள சுயம்பு படத்தின் கேரக்டர் லுக் போஸ்டரை பட குழு வெளியிட்டது.
நடிகை சம்யுக்தா 2018 ஆம் ஆண்டு வெளியான களரி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் இப்படத்தில் கிருஷ்ணாவின் தங்கையாக நடித்திருந்தார். முன்னதாக மலையாளம் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. குறிப்பாக தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் தனது அசத்தலான நடிப்பின் மூலம் தென்னிந்திய திரையுலக ரசிகர்களின் இதயங்களை வென்றவர் தான் நடிகை சம்யுக்தா.
இதைத் தொடர்ந்து தற்போது பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் சுயம்பு படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருக்கிறார். இவருடன் நிகில் ஜோடியாக நபா மற்றும் நடேஷ் ஆகியோரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்தை பிக்ஸ் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. இப்படத்திற்கு கேஜிஎஃப் மற்றும் சலார் படத்தின் புகழ் ரவி பஸரூர், இசையமைத்துள்ளார்.
போர் பின்னணியில் உருவாகும் இப்படம் மிகப்பெரிய பட்ஜெட் மற்றும் முதல் தர தொழில்நுட்பத்துடன் உருவாகியுள்ளதாம். மேலும் சுயம்பு படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாக்கி வருகிறது.
இந்த நிலையில் சம்யுக்தாவின் பிறந்தநாள் செப்டம்பர் 11ஆம் தேதி. இவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் சுயம்பு படத்தில் இருந்து இவரது கேரக்டர் லுக் போஸ்டரை பட குழு வெளியிட்டது. இந்த போஸ்டரில் நடிகை சம்யுக்தா தைரியமிக்க வீராங்கனையாக கேடயத்துடன் வில் அம்பு ஏந்தியபடி காட்சியளிக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சுயம்பு திரைப்படம் நிகிலின் 20வது படமாகும். இதில் நாயகன் நிகில் ஒரு போர் வீரனாகவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}