சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலை, கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். டாக்டர் தமிழிசை தென் சென்னையிலும், நீலகிரி தனி தொகுதியில் எல். முருகனும், மதுரையில் பேராசிரியர் இராம சீனிவாசனும், நெல்லையில் நைனார் நாகேந்திரனும், கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணனும் என மூத்த தலைவர்களும் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அண்ணாமலையின் தேர்தல் பிரச்சாரத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தான் போட்டியிடும் கோவை தொகுதியில் மட்டும் 9 நாட்களுக்குப் பிரச்சாரம் செய்யவுள்ளார் அண்ணாமலை. அவரது தேர்தல் பிரச்சார அட்டவணை வருமாறு:

மார்ச் 29ம் தேதி, ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் தனி, வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.
மார்ச் 30-ஆம் தேதி சனிக்கிழமை சிதம்பரம் தனி, நாகப்பட்டினம் தனி, தஞ்சாவூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.
மார்ச் 31-ஆம் தேதி கரூர் மற்றும் கோயம்புத்தூர் தொகுகளில் பிரச்சாரம் செய்கிறார் அண்ணாமலை.
ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 3ம் தேதி - கோயம்புத்தூர் தொகுதியில் பிரச்சாரம்.
ஏப்ரல் 4 - கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி தனி, விருதுநகர் தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார் அண்ணாமலை.
ஏப்ரல் 6 டூ 8 - கோயம்புத்தூர்.
ஏப்ரல் 5ம் தேதி - ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்கிறார் அண்ணாமலை.
ஏப்ரல் 9 - கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை.
ஏப்ரல் 10 - நாமக்கல், திருப்பூர், பொள்ளாச்சி தொகுதிகளில் சுற்றுப்பயமம்.
ஏப்ரல் 11 - கோயம்புத்தூர்.
ஏப்ரல் 12 - கோயம்புத்தூர், நீலகிரி தனி ஆகிய தொகுதிகளில் அண்ணாமலை பிரச்சாரம் செய்ய உள்ளார் என்று பாஜக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு
மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை
தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?
"2027 உலகக் கோப்பையே எனது கடைசி ஆட்டம்" – விராட் கோலி நெகிழ்ச்சி
இத்தாலியில் பள்ளி மாணவிகள் புர்கா அணிய தடை: அமைச்சரவை ஒப்புதல்
சினிமா படப்பிடிப்புக்கான அனுமதியை இனி ஆன்லைனில் பெறலாம்: தமிழக அரசு அறிவிப்பு
அப்பா மாதிரி நாமளும் ஆகணும்!
இரயில் சினேகம்.. ஒரு நிமிடக் கதை (21)
{{comments.comment}}