சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைக்கும் முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சரத்குமார் இன்று தனது கட்சியை பாஜகவுடன் இணைத்து விட்டார். நேற்று நள்ளிரவில் இந்த யோசனை தோன்றியது. வெறும் சீட்டுக்காக கூட்டணியா என்று யோசித்தபோது மக்கள் சேவை செய்வதுதானே சரியானதாக இருக்க முடியும் என்று எண்ணி இந்த முடிவை எடுத்தேன். எனது மனைவியை எழுப்பி இதைச் சொன்னபோது உங்களுக்கு எது சரின்னு தோணுதோ அதைச் செய்யுங்க. நான் கூடவே இருப்பேன் என்று அவர் எனக்கு நம்பிக்கை கொடுத்தார். அதையடுத்து உடனடியாக அண்ணாமலையை தொலைபேசியில் அழைத்துத் தகவலைச் சொன்னேன் என்று கூறியுள்ளார் சரத்குமார்.
இந்த நிலையில், சரத்குமாரின் இந்த முடிவுக்கு அண்ணாமலை பாராட்டும், வரவேற்பும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமைத்துவதத்தால் ஈர்க்கப்பட்ட சிறந்த தேசியவாதியான சரத்குமார் இன்று, தமிழ்நாடு பாஜக தலைவர்கள்பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் முன்னிலையில் அனைத்திந்திய சமத்துவ மக்கள் கட்சியை, பாரதிய ஜனதா கட்சியுடன் இணைப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
தனது கலைத்திறன் மூலம் தேசிய உணர்வுக்கு குரல் கொடுத்த சரத்குமார், தமிழக மக்களுக்கு சேவை செய்வதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை மக்கள் எதிர்பார்த்திருக்கும் நேரத்தில், சரத்குமார் எடுத்துள்ள முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவாகும்.
தமிழ்நாடு பாஜக சார்பில், பாஜக குடும்பத்திற்கு சரத்குமார் அவர்களை மனதார வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
{{comments.comment}}