Tamil Nadu Budget 2025: பள்ளி, கல்லூரிகளுக்கான அதிரடி அறிவிப்புகள்

Mar 14, 2025,05:25 PM IST

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட்டில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.


பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு அறிவிப்புகள்:


பள்ளிக்கல்வித்துறைக்கு ரூபாய் 46 ஆயிரத்து 767 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


சேலம், கடலூர், திருநெல்வேலியில் தலா ஒரு லட்சம் புத்தகங்களுடன் புதிய நூலகம் அமைக்கப்படும்.


மதுரை, கோவை, சென்னையில் மாணவியர் விடுதிகள் அமைக்க ரூபாய் 225 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.




ரூ.160 கோடியில் 2,000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்.


முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் நீட்டிக்கப்படும். இத்திட்டத்திற்காக ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


மலைப்பகுதிகளில் மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க, உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்


பள்ளிக்கல்வியில் சதுரங் ஆட்டத்தை சேர்த்திடும் வகையில் உடற்கல்வி பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்.


தமிழ் புதல்வன் திட்டத்தில் 3.80 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர். இத்திட்டத்தின் மூலம் கல்வி கடன் வழங்க ரூபாய் 2500 கோடி வழங்க திட்டமிடப்டுள்ளது.


இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ரூபாய் 572 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


தமிழக மாணவர்கள் ஐஏஎஸ் பணியிடங்களில் தேர்ச்சி பெறுவதை அதிகரித்து அதனை ஊக்குவிக்கும் வகையில் ரூபாய் 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்ட மூலம் திறன்மிகு வகுப்பறை நூலகம் உள்ளிட்ட உள்கட்டமைப்பை ஏற்படுத்த ரூபாய் 300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


அரசு பொறியியல் கல்லூரிகளில் இணைய பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு ரோபாட்டிக்ஸ் சார்ந்த புதிய பட்டப் படிப்புகள் அறிமுகம் செய்யப்படும். மாணவர்கள் அதிகம் சேரும் கலை அறிவியல் பாடப் பிரிவுகளில் 15,000 இடங்கள் கூடுதலாக ஒதுக்கப்படும்.


ஆசியாவிலேயே தலைசிறந்த பல்கலைக்கழகமாக அண்ணா பல்கலைக்கழகம் மாற்றிட ரூ.500 கோடியில் பல்வேறு திட்டங்கள் அமைக்கப்படும்.


தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களுக்காக ரூ.46,767 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.


அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.1,000 கோடி ஒதுக்கீடு. 2,000 அரசு பள்ளிகளில் ரூ.160 கோடி செலவில் கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும். கூடுதலாக 3 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவாக்கப்படும்.


பொறியியல் கல்லூரிகளில் ஏஐ படிப்புகள் அறிமுகம் செய்யப்படும்


தமிழ் புதல்வன் திட்டத்தில் 3.80 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர். இத்திட்டத்தின் மூலம் கல்வி கடன் வழங்க ரூபாய் 2500 கோடி வழங்க திட்டமிடப்டுள்ளது.


குன்னூர், நத்தம், சென்னை, ஆலாத்தூர், விக்கிரவாண்டி, செய்யூர்,உள்ளிட்ட 10 இடங்களில் புதிய கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.


தமிழகத்தில் புதிதாக பத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூபாய் 152 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ரூபாய் 572 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எனது வருவாயை தேசிய பாதுகாப்பிற்காக அளிக்கிறேன்...இளையராஜா அறிவிப்பு

news

அமேசானில் ரூபாய் 3 லட்சத்துக்கு பில்.. எதற்கு தெரியுமா?.. இந்த பயலை வச்சுக்கிட்டு!!

news

முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம்

news

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்.. காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு.. பீதியில் உறைந்த மக்கள்‌‌..!

news

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இவரா?...செம சம்பவம் காத்திருக்கு போலவே

news

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்...aicwa அறிவுறுத்தல்

news

தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை.. 13, 14 ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு..!

news

ராணுவத்திற்கு உதவ தயார்... சண்டிகரில் குவிந்த வரும் இளைஞர்கள்!

news

அறத்தின் அடிப்படையில் தான் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்துகிறது: அண்ணாமலை!

அதிகம் பார்க்கும் செய்திகள்