சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 25ம் தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்.
வருகிற 25ம் தேதி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் மதியம் 12 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதுதொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. மேலும், தமிழகத்தில் புதிதாக தொடங்கப்படவுள்ள திட்டங்கள், விரிவாக்கம் செய்யப்பட உள்ள தொழில்களுக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மார்ச் 14ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பிப்ரவரி 25ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால், பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில், முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருகிய மலர்.. வாடாத வாசம்.. அவள்.. Burnt flower!
கூட்டணியை விடுங்க...அதிமுக.,விற்கு இரட்டை இலை சின்னம் சிக்கல் இல்லாமல் கிடைக்குமா?
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
தைப்பூசத் திருவிழா.. சென்னிமலையில் கோலாகலம்.. நாளை கொடியேற்றம்
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது: பிரதமர் மோடி பதிவு!
தேர்தல் களம் காண தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. மதுராந்தகத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்!
{{comments.comment}}