Ilaiayraja: அமுதே தமிழே அழகிய மொழியே.. எங்கள் உயிரே.. இளையராஜாவுக்கு கோலாகல பாராட்டு விழா

Sep 13, 2025,06:04 PM IST

சென்னை: இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெறும் கோலாகலமான பாராட்டு விழா இன்று மாலை சென்னையில் நடைபெற்றது.


இசைஞானி இளையராஜா திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 50 ஆண்டு கால இசைப் பயணத்தில் அவர் செய்துள்ள சாதனைகள் 100 ஆண்டுகளையும் தாண்டி நீளும். அந்த அளவுக்கு வரலாறு படைத்துள்ள இசைஞானிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி பாராட்டு விழா இன்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.




சிம்பொனி சிகரம் தொட்ட தமிழ் இசைஞானி இளையராஜா பொன் விழா ஆண்டு 50- என்ற தலைப்பில் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பிக்கள், ரஜினிகாந்த், கமல்ஹாசன், கங்கை அமரன் உள்ளிட்ட திரைத்துறையினர், பல்துறைப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியின் தொடக்கமாக அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே பாடலை இளையராஜா தனது இருக்கையில் அமர்ந்தபடி குழுவினருடன் பாடினார். அப்போது தனக்கு அருகே அமர்ந்திருந்த கமல்ஹாசனையும் கூடப் பாடுமாறு அவர் சைகை காட்ட, கமலும் இணைந்து பாடி மகிழ்ந்தார். தொடர்ந்து இளையராஜாவின் இசையில் உருவான சூப்பர் ஹிட் பாடல்களை இசைக் குழுவினர் இசைத்து வருகின்றனர்.


முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்து கொடுத்த பாடல்களை இளையராஜா இசைக்குழுவினர்  பாடினர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீடித்தி இந்த இசை மழை அத்தனை பேரையும் நெகிழ வைத்தது. கமல்ஹாசன், ரஜினிகாந்த் பாடல்கள்தான் பெரும்பாலும் அதில் இடம் பெற்றிருந்தது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 23, 2025... இன்று சுற்றி இருப்பவர்களின் ஆதரவு அதிகரிக்கும

news

மார்கழி 08ம் நாள் வழிபாடு : திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 08 வரிகள்

news

அழகிய பாதமே.. A letter to my feet!

news

அன்பெனும் பெருமழை!

news

வி..யில் தொடங்கும் தொகுதியில் போட்டியிடுவாரா விஜய்??.. பரபரக்கும் புதிய தகவல்!

news

பெங்களூருவின் அழகிய கலைப் பொக்கிஷம்.. பனசங்கரி சிற்பப் பூங்கா

news

புத்தம் புது பூமி!

news

தகவல் தொழில்நுட்பம் – வரமா, சாபமா?.. கையில் இருப்பது வெடிகுண்டா அல்லது வெறும் குண்டா!

news

பிரச்சார பீரங்கியாக மாறுகிறாரா சரத்குமார்.. யாருக்கு குறி.. தேர்தலில் போட்டியிட விரும்பாதது ஏன்?

அதிகம் பார்க்கும் செய்திகள்