- பாரதிராஜன்
காலையில் மளிகைக்கடை திறந்ததும் வந்த ஒரு விதவைப் பெண்மணி,கடை முதலாளியிடம், நான் நேற்றுப் பொருட்கள் வாங்கினேன், மீதம் கொடுக்கும் போது 10 ரூபாய் அதிகமாக கொடுத்து விட்டீர்கள், அதை திரும்ப தர வந்தேன் என்றாள் அந்தப் பெண்மணி.
கடைமுதலாளி ஏம்மா நீ தானே விலை குறைவாகக் கொடுக்கச் சொல்லி சத்தம் போட்டே, இப்ப வந்து பத்து ரூபாய் திரும்பத் தரேன் என்றதும் அந்த விதவைப்பெண், விலை குறைவாக கேட்கலாம் ஆனால் உங்களுடைய பொருள் எனக்கு வேணடாம், என் தந்தை மற்றும் என் கணவர் என்னிடம் அடுத்தவர் பொருளுக்கோ, பொன்னுக்கோ ஆசைப்படாதே, நமக்கு மேல் இருப்பவன் நம்மை சும்மா விடமாட்டான் என்ற படியே பணத்தை திரும்ப கொடுக்க அவர், நீ எங்கிருந்து வரே என்றதும், நகரில் இருந்து 6 கி.மீ தூரமுள்ள நகர் என்றாள்.
நேற்று இரவு வந்தேன் கடை பூட்டி யிருந்ததால் காலை வந்தேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினாள். என்னம்மா இந்த ப்பெண் இந்த பத்து ரூபாய் திரும்ப த்தர இரண்டு முறை வந்திருககே என்ற படியே, முதலாளி கடைப் பையனிடம், டேய் கடையைப் பார்த்துக்கோ. இதோ வரேன் என கல்லாவில் இருந்து ரூ. 5,00/__எடுத்துக் கொண்டு, பிரகாஷ் என்ற நபரிடம், நீ நேற்று வாங்கிய பொருட்கள் சிலவற்றுக்கு அதிக விலை சொல்லிவிட்டேன், அதனால் அதன் சரியான விலைப்படி உனக்கு சேர வேண்டிய தொகை எனக்கூறி கொடுக்க, ஏன் நீ இதை கொடுக்க வேண்டிய அவசியமா என்ன? என்றதற்கு, அப்பா நாம் அடுத்த வர் பொருளுக்கு ஆசைப்பட்டால், நமக்கு மேலே இருப்பவன் சும்மா இருக்க மாட்டான் என்றபடியே கடை முதலாளி கிளம்பினார்.

பிரகாஷ்க்கு திடீரென ஷாக் அடித்த மாதிரி இருந்தது. ஆம் கொஞ்ச வருடத்திற்கு முன் பிரகாஷ் ஒரு நண்பரிடம் ரூ. இரண்டு லட்சம் கடனாக வாங்கி இருந்தான். பணம் கொடுத்தவனிடம் பிரகாஷ் எதுவும் எழுதிக்கொடுக்கவில்லை. பிரகாஷ் ஆஹா நல்ல விஷயம் நண்பன் காலமாகி விட்டான், பணத்தை திரும்ப த்தராமல் இருக்க முடிவு செய்தான் பிரகாஷ். இப்ப இந்த முதலாளி பணம் ரூ 5,00/_திரும்பக் கொடுத்ததால்,பிரகாஷ்க்கு இரவு முழுக்க தூக்கம் வரவே இல்லை, காலையில் எழுந்ததும் முதலில் அந்த நண்பன் வீட்டுக்குப்போக முடிவுசெய்து பிரகாஷ் பத்து இலட்சம்
பணத்துடன் நண்பன் வீட்டைத்தேடி நண்பன் மனைவியிடம் காலில் விழுந்து மன்னிப்புக்கேட்டு பணத்தைக் கொடுத்தான் நண்பன் மனைவியிடம்.
யார் அந்தப்பெண் என்றால் கடை முதலாளியிடம் பத்து ரூபாயைத் திரும்பக் கொடுத்தவள்.
(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)
செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு: சென்னை உயர் நீதிமன்றத்தில் பிற்பகலில் விசாரணை!
Wayanad: வயநாடு நிலச்சரிவிற்கு இது தான் காரணம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
Tamil Poem: எஞ்சுவதே உன்னதம்!
உள்ளாட்சி தேர்தலில் வென்றால் ஆட்சியை பிடிக்கலாம்: இபிஎஸ் ஆருடம்
ஓபிஎஸ் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு
முதல்வர் விஜய் கரூர் செல்லவும் தடை இல்லை.. பேசவும் தடையில்லை.. திமுகவின் கோரிக்கைகள் நிராகரிப்பு!
'காக்ரோச் ஜனதா கட்சி'யின் எக்ஸ்தள பக்க முடக்கத்தை நீக்க கோர்ட் அதிரடி உத்தரவு!
ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைனில் பத்திரப்பதிவு: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிப்பு!
எங்கள் கேப்டன் கூல்...தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன முதல்வர் விஜய்
{{comments.comment}}