சென்னை: பிரதமர் குற்றம் சாட்டியது திமுகவை தான். தமிழர்களை அல்ல என்று பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறேன். இந்த நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று எல்லோரும் பாடுபட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அவர் பீகாரி, கோ மூத்திரம் குடிப்பவர்கள், வட இந்தியர்கள், தமிழன் கிடையாது என்று பிரித்து பிரித்து பிரித்து, இந்த தேசத்தில் உள்ள மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தி கொண்டிருப்பது திராவிட முன்னேற்றக் கழகம் தான்.
அதுமட்டுமின்றி, மற்ற சமயத்தை சார்த்தவர்களுக்கு வாழ்த்து சொல்லும் போது இந்துக்களுக்கு வாழ்த்து சொல்லாமல் இந்துக்களை பிரித்து பார்ப்பது ஸ்டாலின் அவர்கள். மரியாதைக்குரிய பாரத பிரதமர் நேற்று என்ன சொன்னார் என்றால், பீகார் மக்களை கீழ்தரமாக பேசுவது திராவிட முன்னேற்ற கழகம். பாகுபாடோடு பேசுவது திராவிட முன்னேற்ற கழகம் என்று தான் சொன்னார். அவர் தமிழர்களைச் சொல்லவில்லை. திராவிட முன்னேற்ற கழகம் என்றால் தமிழர் என்று கூறுகிறார்கள். திராவிட முன்னேற்ற கழகத்தில் இருப்பவர்கள் பாதி பேர் தமிழர்கள் கிடையாது. எம்பிகளில் எத்தனை பேர் பச்சைத்தமிழர்கள் என்று எடுத்து பாருங்கள்.

நாங்கள் இப்படி வேறுபடுத்திப் பார்ப்பதே கிடையாது. ஆனால், கே.என்.நேரு கூறுப்போது பீகாரிகள் அறிவில்லாதவர்கள், அறிவற்றவர்கள், அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள வேலைகளை பறித்துக்கொண்டார்கள் என்று கூறியதற்கு ஸ்டேட்மென்ட் இருக்கு. பீகார் காரர்கள் என்றால் டேபில் துடைப்பதற்கு தான் லாயக்கு, அவர்கள் பான்பராக் விற்பவர் என்று சொன்னது யாரு.
திமுகவைத்தான் அவர் சொன்னார். தமிழர்களை அவர் சொல்லவில்லை. ஸ்டாலின் அவர்களுக்கு நான் ஒன்றை சொல்லுகிறேன். திமுக மீது வைக்கப்படும் விமர்சனம் திமுக மீது மட்டும் தான். தமிழர்கள் மீது கிடையாது. தமிழர்கள் பீகார் மக்களுடன் ஒன்றாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வேற்றுமை படுத்துவது திராவிட முன்னேற்ற கழகம் தான். தமிழர்களை பிரதமர் வேற்றுமைபடுத்துகிறார்கள் என்று கூறவில்லை. திமுகவையும், திமுகவைச்சார்ந்தவர்களும் பீகார் மக்களை இழிவுபடுத்துகிறார்கள் என்ற உண்மையை தான் பதிவு செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
 
                                                                            கே.ஏ. செங்கோட்டையன் நீக்கம்.. எம்ஜிஆரின் ஆரம்ப கால தொண்டர்.. 50 ஆண்டு கால அதிமுக அடையாளம்!
 
                                                                            ஒரே நேரத்தில் உருவான இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் – சென்னை வானிலை தகவல்!
 
                                                                            தனது கண்ணியத்தை இழக்கும் வகையில் பேசுகிறார் பிரதமர் மோடி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
 
                                                                            பிரதமர் குற்றம் சாட்டியது திமுகவை தான்... தமிழர்களை அல்ல: தமிழிசை சவுந்தர் ராஜன் பேட்டி!
 
                                                                            தமிழர்களை எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை: கனிமொழி
 
                                                                            SIR திட்டத்தை எதிர்த்து.. திமுக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம்.. விஜய் செல்வாரா?
 
                                                                            குப்பைமேடாக மாறும் சின்னக்காளி பாளையம்.. திமுக அரசு திட்டத்தை கைவிட வேண்டும்: அண்ணாமலை
 
                                                                            ரூ.3,250 கோடி ஒப்பந்தம்... தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு!
 
                                                                            இரும்புப் பெண் இந்திரா காந்தி.. இன்னும் சில பத்தாண்டுகள் இருந்திருந்தால்.. இந்தியா எப்போதோ வல்லரசு!
{{comments.comment}}