பாரதி இன்று இருந்திருந்தால், பிரதமருக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சௌந்தரராஜன்

Dec 11, 2025,01:35 PM IST

சென்னை: பாரதியார் இன்று இருந்திருந்தால் பிரதமர் மோடியை வாழ்த்தி பாடல் பாடியிருப்பார் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


மகாகவி  பாரதியாரின் 144வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று சென்னையில்  உள்ள பாரதியார் சிலைக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பாரதியாருக்கு வணக்கம் சொல்லும் இந்த நேரத்தில் பிரதமர் மோடிக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவில் எந்த பிரதமரும் பாரதியாருக்கும், வஉசிக்கும் மரியாதை செலுத்தியதே கிடையாது.


இன்று பாரதியார்  இருந்திருந்தால், பிரதமர் மோடியை வாழ்த்தி பாடல் பாடியிருப்பார். ஏன் என்றால் தேசியத்தையும் தெய்வீகத்தையும் பிரதமர் முன்னிறுத்திக் கொண்டிருக்கிறார். அதேபோல் அண்ணா அறிவாலயத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தேசிய கொடியை கூட திமுக ஏற்றியதே இல்லை. ஆனால் தேசப்பற்று பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் திருச்சி சிவா போன்றவர்கள் இன்று நாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழுக்கு பிரதமர் பிரம்மாண்டமான மரியாதை செய்து கொண்டிருக்கிறார்.




ஆனால் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் டெல்லி பாதுஷா என்று அப்படி இப்படி என்று பேசிக்கொண்டு இருக்கிறார். பாரதியாருக்கு சாதியை வைத்து திமுக அரசு இதுவரை விழா எடுக்கவில்லை. 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி வென்ற பிறகு பாரதியாரை கொண்டாடி அரசு சார்பில் பிரம்மாண்ட அளவில் விழா நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

என்னுள் எழுந்த (தீ)!

news

144 வயதைத் தொட்ட மகாகவி.. காலம் உள்ளவரை நீளும் பாரதியின் தீ வரிகள்!

news

பாரதி இன்று இருந்திருந்தால், பிரதமருக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சௌந்தரராஜன்

news

வீரத்தின் விளை நிலம் எங்கள் பாரதியே....!

news

ஆட்டுக்கொட்டகையில் பிறந்து வளர்ந்து.. கொடூரனுக்கு எதிராக கொதித்தெழுந்த பெத்தனாட்சி!

news

சுப்ரியா சாகு அவர்களுக்கு ஐ.நா. விருது.. தமிழ்நாடு பெருமை கொள்கிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

நாமும் உணரும் திறனும்.. (Our sensitivity)

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்... இன்றைய விலை நிலவரம் இதோ

news

சூடுபிடிக்கும் சட்டசபை தேர்தல் பணிகள்.. டிசம்பர் 15 முதல் அஇஅதிமுக விருப்பமனு!

அதிகம் பார்க்கும் செய்திகள்