சென்னை: தமிழக சட்டப்பேரவை அக்டோபர் 14ம் தேதி கூடுகிறது என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
இந்தாண்டிற்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஜனவரி மாதம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அன்று ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறினார். அதன்பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெற்றது. இதனையடுத்து, 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட் மார்ச் 14ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மார்ச் 15ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மார்ச் 17 முதல் மார்ச் 22 வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதன்பின் மார்ச் 24 முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை துறை ரீதியிலான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
இந்த நிலையில் 6 மாத இடைவெளியில் மீண்டும் சட்டப்பேரவை கூட்டப்பட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில், தற்போது அக்டோபர் 14ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி காலை 9:30 கூடுகிறது. மேலும் அன்றைய தினம் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மறைமுக வால்பாறை சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர் மறுமை குறித்து இரங்கல் குறிப்பு தெரிவிக்கப்படும்.
அதேபோல் அன்றைய தினம் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. அலுவலக கூட்டம் பேரவை கூடுவதற்கு முன்னர் ஒரு நாள் அலுவல் ஆய்வு கூடி கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது முடிவு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.
இத்தாலியில் பள்ளி மாணவிகள் புர்கா அணிய தடை: அமைச்சரவை ஒப்புதல்
Dilani Sridharan Poem: பேரழகு!
சினிமா படப்பிடிப்புக்கான அனுமதியை இனி ஆன்லைனில் பெறலாம்: தமிழக அரசு அறிவிப்பு
மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை
அப்பா மாதிரி நாமளும் ஆகணும்!
வேர் இன்றி விருட்சம் தான் உண்டோ?
சங்கமம்!
இரயில் சினேகம்.. ஒரு நிமிடக் கதை (21)
வாழ வைக்கும் வல்லாரைக்கு ஜே.. நினைவாற்றலைப் பெருக்கும் சூப்பர் கீரை!
{{comments.comment}}