சென்னை : தமிழகம் வரும் பிரதமரிடம், முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கோரிக்கைகள் அடங்கிய தமிழக அரசின் மனுவை யார் வழங்க போகிறார் என்ற தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அவருக்கு இதயத்துடிப்பில் மாற்றங்கள் இருந்ததால் ஆஞ்சகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் நலமுடன் இருந்தாலும் இன்னும் ஓரிரு நாட்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருந்தால் மருத்துவமனையில் இருந்தபடியே தனது அலுவல்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனித்து வருகிறார். அமைச்சர்களுடன் ஆலோசனை, மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை ஆகியவற்றை செய்து வருகிறார்.

இந்நிலையில் 6வது நாளாக மருத்துவமனையில் சகிச்சை பெற்று வரும் முதல்வர் ஸ்டாலினை திமுக எம்.பி., கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று இன்று சந்தித்துள்ளனர். இதற்கிடையில் தூத்துக்குடியில் நலத்திட்டங்கள் பலவற்றை துவக்கி வைப்பதற்காக, மூன்று மாதங்களுக்கு பிறகு பிரதமர் மோடி இன்று தமிழகம் வர உள்ளார். தமிழகம் வரும் முதல்வரை வரவேற்க முதல்வரால் செல்ல முடியாத காரணத்தால் அவருக்க பதில் யார் பிரதமரை வரவேற்று, அவரிடம் தமிழக அரசின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்க போகிறார் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது, மருத்துவமனையில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை தலைமை செயலாளர் மூலமாக கொடுத்து அனுப்பி உள்ளார். தலைமை செயலாளரிடம் இருந்து கோரிக்கை மனுவை பெற்று, அமைச்சர் தங்கம் தென்னரசு, பிரதமர் மோடியிடம் அளிப்பார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முகம் மலரோ தாமரைப்பூ.. மனம் மணமோ மல்லிகைப்பூ!
வேறு முகங்கள்!
நூலகமும் நானும்.. மயிலாப்பூர் முதல் பாஸ்டன் வரை!
அமைதியா இரு
Short Story by Sudha Thirunarayanan: பை!
தலையங்கம்: நாட்டின் பாதுகாப்பில் பெண்மையின் பேராற்றல்.. CRPF Women Battalion turns 40!
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு: அடுத்தடுத்து சிக்கும் நபர்கள்... தீவிரமடையும் விசாரணை
பிரே பண்ணிட்டு சாப்பிடுவோமா?.. நீட்டிக்கப்பட்ட காலை உணவுத் திட்டம்.. தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
திமுக.,வுக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் தொடர்பு இல்லை: முன்னாள் அமைச்சர் ரகுபதி
{{comments.comment}}