சென்னை: நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்று தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே அடுத்து 48 மணி நேரத்தில் தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. நாளை உருவாகும் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 48 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையை திசையில் தமிழ்நாட்டை நோக்கி நகரக் கூடும் எனவும் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் டிசம்பர் 16, 17, 18, ஆகிய மூன்று நாட்கள் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று கன மழை:
விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள்:
மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், ஆகிய ஆறு மாவட்டங்களில் நாளை மறுநாள் அதாவது டிசம்பர் 16ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 17ஆம் தேதி மிக கனமழை(ஆரஞ்சு அலர்ட்):
கடலூர்,நாகை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, ஆகிய நான்கு மாவட்டங்களில் டிசம்பர் 17ஆம் தேதி மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் ஏற்கனேவே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்த ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்தும் ஒரே இடத்தில் இருந்து கொண்டே மழையை கொடுத்தது. இதனைத் தொடர்ந்து உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகர்ந்து கடலோர மாவட்டங்களில் மழையை கொடுத்தது. ஆனால் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடையும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதி எந்த திசையில் நகரும் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.
இதனால் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்வின் திசையை பொறுத்தே எங்கு மழை கொடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திரியோதசியில் வரும்.. ஆவணி மாத பிரதோஷம்.. சிவனையும், நந்தியையும் வழிபட உகந்த நாள்!
மதிமுக கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யா தற்காலிக நீக்கம்: வைகோ
46 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் கமல்-ரஜினி?.. மாஸ் காட்டப் போகும் லோகேஷ் கனகராஜ்!
தொடர்ந்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வரும் தங்கம் விலை... இன்று எவ்வளவு குறைவு தெரியுமா
டில்லியில் 50 க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெளிகுண்டு மிரட்டல்
பாஜகவின் புதிய செக்.. முதல்வர், அமைச்சர்கள் கைதானால் 30 நாளில் பதவி காலி.. புது மசோதா!
டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது திடீர் தாக்குதல்.. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரால் பரபரப்பு
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 20, 2025... இன்று அதிர்ஷ்டம் கதவை தட்டும்
களை கட்டியது தவெக மாநில மாநாடு... சாலை மார்க்கமாக மதுரை வந்தடைந்தார் விஜய்!
{{comments.comment}}