சென்னை: தெற்கு வங்க கடலில் பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தெற்கு வங்ககடல் மத்தியில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று காலை எட்டு மணி அளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அடுத்த இரண்டு நாட்களில் அதாவது 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் தமிழ்நாட்டு கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டை நோக்கி நகர இருப்பதால் நாளை முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்புள்ளது.நாளை மற்றும் நாளை மறுநாள் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழக கடலோரப் பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை மிக கனமழை:
செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் நாளை கனமழை:
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், ஆகிய ஐந்து மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை - நாளை மறுநாள் மிக கனமழை:
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், ஆகிய ஆறு மாவட்டங்களில் நாளை மறுநாள் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது .
நாளை மறுநாள் கனமழை:
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், அரியலூர், மயிலாடுதுறை, ஆகிய 6 மாவட்டங்களில் நாளை மறுநாள் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மழை:
சென்னையில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மிதமான மழை:
தமிழ்நாட்டில் டிசம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வெளிநாடுகளில் இருந்தாலும் அயலக தமிழர்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் கொலை நடைபெறாத நாட்களே இல்லை... திமுக ஆட்சியில் யாருமே பாதுகாப்பை உணரவில்லை: அண்ணாமலை
பாஜகவினர் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது: செல்வபெருந்தகை பேட்டி!
புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்: ஆர்ஏசி, வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் கிடையாதாம்
விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் 4 மணிநேரம் விசாரணை
பாஜகவால் மட்டுமே கேரளாவில் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும்: மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி
இலக்குகளை அடைவதற்கான உந்துசக்தி... Motivation!
2026 பொங்கல் எப்போது? ஜனவரி 14-ஆ அல்லது 15-ஆ? - ஒரு தெளிவான விளக்கம்
வெற்றி என்பது எது தெரியுமா?.. Success is when others copying you
{{comments.comment}}