சென்னை: தமிழ்நாட்டில் டெல்டா பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து நேற்று பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. குறிப்பாக சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி சாலைகளில் மழை நீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது.
அதேபோல் நெல்லை தூத்துக்குடி, இராமநாதபுரம், நாமக்கல், மயிலாடுதுறை,சீர்காழி, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. நெல்லை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 10 cm மழை பதிவாகியுள்ளது. அதேபோல் நாலுமுக்கு 9.6 சென்டிமீட்டர், காக்காச்சி 8.7 சென்டிமீட்டர், மாஞ்சோலையில் 7.8 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது.

சென்னை மழை:
சென்னையில் மயிலாப்பூர்,மந்தவெளி, அடையாறு, பட்டினப்பாக்கம், அண்ணா நகர், திருவான்மியூர், கிண்டி, ஆகிய பகுதிகளில் மாலை முதல் இரவு வரை மழை விட்டு விட்டு பெய்தது. அதேபோல் சோளிங்கநல்லூர், செம்மஞ்சேரி, மேடவாக்கம், ஓஎம்ஆர் சாலை உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் இரவில் விடிய விடிய கன மழை பெய்துள்ளது.
இந்த நிலையில் தென் தமிழக மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று கன மழை:
ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, கடலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ஆகிய ஏழு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}