வளி மண்டல மேலடுக்கு சுழற்சி.. பொங்கலுக்கு மழை இருக்கு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!

Jan 11, 2025,05:20 PM IST

சென்னை: மேலடுக்கு காற்று சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் வரும் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 


கடந்த டிசம்பர் மாதத்துடன் வடகிழக்கு பருவ மழை நிறைவடைந்து தமிழ்நாடு முழுவதும் பெரிய அளவில் மழை இல்லை. தற்போது அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் அதிகமாக பனி இருந்தாலும் பகலில் வெயிலுடன் மிதமான காற்று வீசி வருகிறது.


இந்த நிலையில் காற்று சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: 




வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஜனவரி 12 முதல் 16 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மாஞ்சோலை வனப்பகுதியில் மட்டும் கனமழை பெய்யும். இது இந்த சமயத்தில் பொதுவான நிகழ்வு. 


சென்னை முதல் டெல்டா மற்றும் தூத்துக்குடி வரையிலான கடலோர பகுதிகளில் மழை இருக்கும். தமிழ்நாட்டில் உள் பகுதிகளிலும் கூட மழை பெய்யும். இது விடுமுறை காலம் என்பதால் மழையால் விடுமுறை பயணம் பாதிக்கப்படாது. ஜனவரி 14 முதல் 15ஆம் தேதி வரை மாஞ்சோலை மற்றும் குற்றாலத்தின் சில பகுதிகளில் நீர்ப்பெருக்கு அதிகரிப்பைக் காணலாம்.


மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் முதல் கட்டமாக, 12 முதல் 16ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை மழை பெய்யும். 

அதேபோல் தமிழ்நாட்டில் இரண்டாவது கட்டமாக, 19ம் தேதி முதல்  21 ஆம் தேதிகளில் குறைந்த அளவிலான மழை பெய்யக்கூடும். குறிப்பாக டெல்டா முதல் தென் மாவட்டங்கள் வரை கனமழை பெய்யக்கூடும். அதே சமயம் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யாது என தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இனி அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது: டாக்டர் ராமதாஸ் போட்ட கண்டிஷன்!

news

புதுச்சேரி துணை நிலை ஆளுநருடன் மோதல்.. சமாதானமானார் முதல்வர் என். ரங்கசாமி!

news

மதுரையில் ரூ. 200 கோடி சொத்துவரி ஊழல்: சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

பிரகாஷ் ராஜ், ராணா, விஜய் தேவரகொண்டா.. 29 தெலுங்கு நடிகர், நடிகைகள் மீது வழக்கு

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

தமிழக வெற்றிக் கழகம் என்று படகுகளில் எழுதினால் மானியம் மறுப்பதா.. விஜய் கண்டனம்

news

அதிமுகவை மீட்க முடியாதவர் பழனிச்சாமி தமிழகத்தை மீட்பேன் என்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

எதிர்க்கட்சித் தலைவர் சங்கிகள்... எழுதிக் கொடுப்பதை அப்படியே வாசித்து வருகிறார்: அமைச்சர் சேகர்பாபு

news

புதுப் புது வரலாறு படைக்கக் காத்திருக்கும் சுப்மன் கில்.. 4 உலக சாதனைகளுக்கு ஆபத்து!

அதிகம் பார்க்கும் செய்திகள்