சென்னை: வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கு பரவலாக மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்க கடல் பகுதிகளில் கடந்த 16ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மீண்டும் திரும்பி தெற்கு தென்மேற்கு திசையில் தமிழ்நாடு ஆந்திரா கரையோர பகுதிகளை ஒட்டி நகர்ந்து வந்தது. இதனால் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வந்தது. மறுபுறம் அநேக இடங்களில் மழை இல்லாமல் வெயில் அதிகரித்து வந்தது.

இந்த நிலையில் தெற்கு ஆந்திரா மற்றும் வடக்கு தமிழக கடற்கரை பகுதிகளில் நேற்று நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 5:30 நிலவரப்படி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை எதுவும் இல்லை எனவும் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்கள் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. அதே வேளையில் ஆந்திராவில் இன்று ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
டிசம்பர் 26 வரை தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் தகவல்
The world of AI.. மனித சிந்தனையின் நவீன வடிவம்.. செயற்கை நுண்ணறிவு
ஆனந்தம் அடைகிறது மனம்.... அனுபவத்தில்!
ஓ.. கணிதமே... நீ இல்லையேல் ஒன்றுமே இல்லை.. தேசிய கணித தினம்
மார்கழி மாதம் மட்டுமே காட்சி தரும்.. மரகதலிங்க தரிசனம்.. திருச்செங்கோடு!
நாரணஹரியை நாளும் பணிந்து .. நற்பாதம் உய்வோமே!
அவள் தான் எங்கள் ஆனந்தஜோதி...!
ஏகநாஞ்சேரி என்றொரு கிராமம்!
Christmas: தவெகவின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.. மாமல்லபுரத்தில் இன்று விஜய் பேச்சு!
{{comments.comment}}