கத்திரி வெயில் நாளை தொடக்கம்.. ஆனால் தமிழ்நாட்டில் பெய்யும் மழையால் வெயில் குறையும்.. வெதர்மேன்!

May 03, 2025,10:42 AM IST

சென்னை: கத்திரி வெயில் காலம் நாளை முதல் தொடங்குகிறது, ஆனால் தமிழ்நாட்டின் பல இடங்களில் பெய்யும் மழையால் வெப்பநிலையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.


தமிழ்நாட்டில் கோடைகாலம் துவங்கி தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.  மேலும் கத்திரி வெயில் நாளை தொடங்க உள்ள நிலையில், வெயில் உச்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பருவநிலை மாற்றத்தின் காரணமாக தற்போது ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.




இந்த நிலையில்  தமிழ்நாட்டிற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதால் வெயில் குறையக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் கூறியதாவது,


02.05.2025 அன்று மாலை 5.30 மணி நிலவரப்படி, தமிழ்நாட்டில் 38 டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கு மேல் வெப்பநிலை அதிகரித்ததது.


அதன்படி, கரூர் 40, வேலூர் 39.3, ஈரோடு  39.2, திருச்சி  39.1, சேலம் 38.2, மதுரை விமான நிலையம் 38.2, சென்னை விமான நிலையம்  38.1, மற்றும் திருத்தணியில் 38 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தியது.


இதனை தொடர்ந்து இன்றும் கரூர் மற்றும் வேலூரில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் முதலிடத்தில் இருக்கும்.


 கடந்த ஆண்டு (2024) ஏப்ரல் மாதத்தில் கரூர் 44 C ஐ தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆகிய  மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த ஒரு வாரத்தில் வெப்பநிலை படிப்படியாகக் குறையும்.ஏனெனில் மழையால் தமிழ்நாட்டில் வெப்பம் குறையும்.


கத்திரி வெயில் காலம் நாளை முதல் தொடங்குகிறது, ஆனால் தமிழ்நாட்டின் பல இடங்களில் பெய்யும் மழை வெப்பநிலையைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.


கடந்த 2024ல் ஏப்ரல் மாதத்தைப் போல் இல்லாமல், இந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழகத்திற்கு மிகவும் நல்லதாக இருந்தது‌. ஏனெனில் அவ்வப்போது மழை பெய்யும்.


ஆந்திராவுக்கு அருகில் உள்ள வேலூர் பகுதியில் தொடர்ந்து 39-40 டிகிரி செல்சியஸ் இருக்கும், இது இப்பகுதிக்கு இயல்பானது. அங்கும் மழை தொடர்ந்து பெய்யும்.


இன்று வெப்பநிலை:


வேலூர்,கரூர்,ஈரோடு, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 39 முதல் 40 C ஆக இருக்கும். சென்னையின் உட்புறம் மீனம்பாக்கத்தில் சுமார் 37-38C ஆக இருக்கும்



இன்று மழை:


வடக்கு உட்புறம் பகுதிகளான வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் மேற்கு தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர்  ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் குறுகிய கால அதிக தீவிரம் கொண்டவை.


பெங்களூருவில் மழை பெய்யும் வாய்ப்புகள் மிக அதிகம்.


சென்னை அடுத்த 24 மணி நேரத்தில் நகரின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு அரி்து என பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாகிஸ்தான் கப்பல், இமெயில், போஸ்ட் எதுக்கும் அனுமதி கிடையாது...இந்தியா அதிரடி

news

நாளை அக்னி நட்சத்திரம் 2025 ஆரம்பம்...கத்திரி வெயில் தோன்றிய கதை தெரியுமா?

news

தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்த திட்டம்...நட்டா தலைமையில் ஆலோசனை கூட்டம்

news

பாஜக.,வின் உருட்டல்...மிரட்டலை அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம் : முதல்வர் பேச்சு

news

பாகிஸ்தான் புதிய ஏவுகணை சோதனை...எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்

news

மதுரையில் ஜூன் 1ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்.. முதல்வர் அறிவிப்பு!

news

பாகிஸ்தான் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்தது இந்தியா

news

தமிழக மீனவர்களின் மீது.. இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்குதல்.. மீனவர்கள் போராட்டம்!

news

முதல்வர் ஸ்டாலின் தலைமையில்.. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது..!

அதிகம் பார்க்கும் செய்திகள்