10 வருடங்களுக்கு பிறகு‌‌.. ஏப்ரல் மாதத்தில் சென்னையில் பலத்த மழை .. தமிழ்நாடு வெதர்மேன்!

Apr 16, 2025,06:49 PM IST

சென்னை: ஏப்ரல் மாதத்தில் சுமார் பத்து வருடத்திற்கு பிறகு சென்னையில் தற்போது கன மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக பள்ளிக்கரணை நாராயணபுரத்தில் 156.6 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


சென்னை உள்ளிட்ட வட தமிழ்நாட்டில் சமீப காலமாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், தற்போது பல வானிலை மாற்றம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று  திடீரென கனமழை பெய்து வருகிறது. சுமார் ஒரு மணி நேரமாக இந்த மழை நீடித்து வருகிறது.குறிப்பாக எம் ஆர் சி நகர், மெரினா, மந்தவெளி, அடையாறு, பட்டினப்பாக்கம், கிண்டி, அசோக் நகர், மதுரவாயில், மாதவரம், ஆவடி, புழல், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன முதல் மிதமான மழை வரை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.



சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த திடீர் மழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.  மும்பையில் இருந்து சென்னைக்கு தரையிறங்க வந்த ஏர் இந்திய விமானம் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. அதேபோல் சென்னையில் இருந்து கிளம்ப  வேண்டிய பத்திற்கு மேற்பட்ட விமானங்கள் செல்ல முடியாமல் தாமதமானது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். மழை நின்ற பிறகு மீண்டும் தடையின்றி விமான சேவை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்து வரும் நிலையில், சென்னை மழை குறித்த அறிவிப்பை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 


அதன்படி, இன்று மதியம் 12.30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக பள்ளிக்கரணை நாராயணபுரத்தில் 156.6 மில்லி மீட்டர் மழை வெளுத்து வாங்கியது. அதேபோல்  வளசரவாக்கத்தில் 111.6 மில்லி மீட்டர் மழையும், சாலிகிராமத்தில் 106.5 மில்லி மீட்டர் மழையும், மடிப்பாக்கத்தில் 100.8 மில்லி மீட்டர் மழையும்,  பதிவாகியுள்ளது. அதேபோல் நெற்குன்றத்தில் 99.6 மில்லிமீட்டர், மணலியில் 91.8 மில்லிமீட்டர், விருகம்பாக்கத்தில் 83.6 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.


மேலும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு கோடை காலமான ஏப்ரல் மாதத்தில் தற்போது அரிதான காற்றுடன்  கனமழை பெய்துள்ளது. சென்னையில் சில இடங்களில் 100 மிமீ மழை பதிவானது. இப்போது மழை  ECR பெல்ட்டிற்கு நகர்கிறது.

சிறுசேரி, கேளம்பாக்கம், மகாபலிபுரம், பொன்மார், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்